முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமெரிக்க அமைச்சர் இந்தியா வருகை

வெள்ளிக்கிழமை, 25 மே 2012      இந்தியா
Image Unavailable

வாஷிங்டன், மே. 25 - அமெரிக்க பாதுகாப்பு துறை அமைச்சர் லியோன் பனேட்டா வியட்நாம் தலைநகர் ஹனோயில் இருந்து இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்யவுள்ளார். இந்தியாவில் அவர் 2 நாட்கள் தங்கியிருப்பார். ஆசிய பிராந்தியத்தில் ஒரு வாரம் சுற்றுப் பயணம் மேற்கொள்ளும் பனேட்டா ஜூன் 5 ம் தேதி இந்தியா வருகிறார். இம்மாதம் 30 ம் தேதி அமெரிக்காவில் இருந்து புறப்படும் அவர் சிங்கப்பூர் செல்கிறார். சிங்கப்பூரில் ஜூன் 2 ம் தேதி ஷாங்கிரிலா பேச்சுவார்த்தையில் கலந்து கொள்கிறார். இந்த நிகழ்ச்சியில் சிங்கப்பூர், ஜப்பான், கொரியா ஆகிய நாடுகள் கலந்து கொள்கின்றன. சிங்கப்பூரில் இருந்து வியட்நாம் செல்லும் அவர் அங்கு 2 நாட்கள் தங்கியிருப்பார். அங்கிருந்து அவர் புதுடெல்லிக்கு பயணமாவார் என்று பெண்டகன் வெளியிட்ட செய்தி குறிப்பில் இருந்து தெரியவருகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்