எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த ஊரடங்கு ஆகஸ்ட் 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதையொட்டி பல்வேறு கட்டுப்பாடுகளையும், தளர்வுகளையும் அரசு அறிவித்துள்ளது. அதன் படி சமூக இடைவெளியை கடைபிடித்து வரும் 15-ம் தேதி சுதந்திர தின விழா கொண்டாடப்படும் என்றும் பஸ், ரயில் உள்ளிட்ட போக்குவரத்து சேவைகள் இயங்காது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் வேகமாக பரவி வரும் கொரோனா நோய் தொற்றை தடுப்பதற்காக ஆகஸ்ட் 31-ம் தேதி வரை ஊரடங்கு மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமைகளில் தளர்வுகள் இல்லா பொதுமுடக்கம் அமலில் இருக்கும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
அதன்படி பெருநகர சென்னை காவல் துறை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் நோய் கட்டுப்பாட்டு பகுதி தவிர மற்ற பகுதிகளில் ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட பணிகளுடன் கீழ்க்காணும் பணிகளுக்கு 1.8.2020 முதல் அனுமதி அளிக்கப்படுகிறது:-
தற்போது 50 சதவீத பணியாளர்களுடன் செயல்படும் அனைத்து தொழில் நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள் மற்றும் ஏற்றுமதி நிறுவனங்கள், 75 சதவீத பணியாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படும். உணவகங்கள் மற்றும் தேநீர்க் கடைகளுக்கென அரசால் ஏற்கனவே வெளியிடப்பட்ட நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி, உணவகங்கள் மற்றும் தேநீர் கடைகளில் உள்ள மொத்த இருக்கைகளில், 50 விழுக்காடு இருக்கைகளில் மட்டும் வாடிக்கையாளர்கள் அமர்ந்து காலை 6 மணி முதல் இரவு 7 மணி வரை உணவு அருந்த அனுமதிக்கப்படுகிறது. எனினும், உணவகங்களில் குளிர் சாதன வசதி இருப்பினும், அவை இயக்கப்படக் கூடாது. உணவகங்களில் முன்பு இருந்தது (31.7.2020 வரை) போன்று காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை பார்சல் சேவை மட்டும் அனுமதிக்கப்படும். ஏற்கனவே அரசு அறிவித்துள்ள நிலையான வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்றி, ஊராட்சி, பேரூராட்சி மற்றும் நகராட்சி பகுதிகளில் உள்ள சிறிய திருக்கோவில்கள், அதாவது 10,000 ரூபாய்க்கும் குறைவாக ஆண்டு வருமானம் உள்ள திருக்கோவில்களிலும், சிறிய மசூதிகளிலும், தர்காக்களிலும், தேவலாயங்களிலும் மட்டும் மாவட்ட கலெக்டர்களின் அனுமதியுடன் பொதுமக்கள் தரிசனம் அனுமதிக்கப்படும். பெரிய வழிபாட்டுத் தலங்கள் மற்றும் மாநகராட்சி பகுதிகளில் உள்ள அனைத்து வழிபாட்டுத் தலங்களிலும் , பொது மக்கள் தரிசனம் அனுமதிக்கப்பட மாட்டாது.
காய்கறி கடைகள், மளிகைக் கடைகள் ஆகியவை காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை இயங்க அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது இக்கடைகள் காலை 6 மணி முதல் இரவு 7 மணி வரை இயங்க அனுமதிக்கப்படுகிறது. ஏற்கனவே காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை இயங்க அனுமதிக்கப்பட்ட மற்ற கடைகள், தற்போது காலை 10 மணி முதல் மாலை 7 மணி வரை இயங்க அனுமதிக்கப்படும். அத்தியாவசிய மற்றும் அத்தியாவசியமற்ற பொருட்கள் உட்பட அனைத்து பொருட்களையும், மின் வணிக நிறுவனங்கள் மூலமாக வழங்க அனுமதிக்கப்படுகிறது.
பெருநகர சென்னை காவல் துறை எல்லைக்குட்பட்ட பகுதி தவிர, தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்ட பகுதிகளிலும் நோய் கட்டுப்பாட்டு பகுதிகள் தவிர மற்ற பகுதிகளில், ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட பணிகளுடன் கீழ்க்காணும் பணிகளுக்கு 1.8.2020 முதல் அனுமதி அளிக்கப்படுகிறது:-
அரசு ஏற்கனவே வெளியிட்டுள்ள நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி, ஏற்கனவே ஊராட்சிப் பகுதிகளில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், பேரூராட்சி மற்றும் நகராட்சி பகுதிகளில் உள்ள சிறிய திருக்கோவில்கள், அதாவது 10,000 ரூபாய்க்கும் குறைவாக ஆண்டு வருமானம் உள்ள திருக்கோவில்களிலும், சிறிய மசூதிகளிலும், தர்காக்களிலும், தேவலாயங்களிலும் மட்டும் மாவட்ட கலெக்டர்களின் அனுமதியுடன் பொதுமக்கள் தரிசனம் அனுமதிக்கப்படும். பெரிய வழிபாட்டுத் தலங்கள் மற்றும் மாநகராட்சி பகுதிகளில் உள்ள அனைத்து வழிபாட்டுத் தலங்களிலும், பொது மக்கள் தரிசனம் அனுமதிக்கப்பட மாட்டாது.
குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 144-ன் கீழ் பொது இடங்களில் ஐந்து நபர்களுக்கு மேல் கூடக் கூடாது என்ற நடைமுறை தொடர்ந்து அமலில் இருக்கும். தமிழ்நாடு முழுவதும் நோய்க் கட்டுப்பாட்டு பகுதிகளில் தற்போதுள்ள நடைமுறைகளின்படி, எந்த விதமான தளர்வுகளுமின்றி ஊரடங்கு முழுமையாக கடைபிடிக்கப்படும். அனைத்து, தொழில் மற்றும் வணிக நிறுவனங்கள் தங்களது ஊழியர்கள் / பணியாளர்களை வீட்டிலிருந்தபடி பணிபுரிய ஊக்குவிப்பதோடு, தொழில் மற்றும் வணிக நிறுவனங்களில் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும். இரயில் மற்றும் விமான போக்குவரத்தைப் பொறுத்தவரை தற்போதுள்ள நிலையே தொடரும். ஏற்கனவே உள்ள நடைமுறைப்படி, மாவட்டம் விட்டு மாவட்டம் செல்லும் போதும், வெளி மாநிலங்களிலிருந்து தமிழ்நாட்டிற்கு வரும் போதும், சம்மந்தப்பட்ட மாவட்ட கலெக்டரிடம் / சென்னை மாநகராட்சி ஆணையரிடம் முறைப்படி இ-பாஸ் பெற வேண்டும்.
தமிழ்நாடு முழுவதும் ஆகஸ்ட் 15-ம் தேதி, மத்திய அரசின் வழிகாட்டுதல்களின்படி, சமூக இடைவெளி, முககவசம் அணிதல் போன்றவற்றை கடைபிடித்து சுதந்திர தின விழா கொண்டாடப்படும். ஏற்கனவே நடைமுறையில் உள்ள கீழ்காணும் செயல்பாடுகளுக்கான தடைகள், மறு உத்தரவு வரும் வரை தொடர்ந்து அமலில் இருக்கும்.
நகராட்சிப் பகுதிகளில் உள்ள அனைத்து வழிபாட்டுத்தலங்களிலும் மற்றும் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பகுதிகளிலும் உள்ள பெரிய வழிபாட்டு தலங்களிலும் பொதுமக்கள் வழிபாடு. அனைத்து மதம் சார்ந்த கூட்டங்கள். நீலகிரி மாவட்டத்திற்கும், கொடைக்கானல், ஏற்காடு போன்ற அனைத்து சுற்றுலா தலங்களுக்கும், வெளியூர் சுற்றுலா பயணிகள் செல்ல தடை தொடரும். தங்கும் வசதியுடன் கூடிய ஓட்டல்கள், ரிசார்ட்டுகள், பிற விருந்தோம்பல் சேவைகளுக்கு தடை தொடரும். எனினும், மருத்துவத் துறை, காவல் துறை உள்ளிட்ட அனைத்து அரசு அலுவலர்கள் மற்றும் வெளி மாநிலத்தவர்களை தனிமைப்படுத்துவதற்கு மட்டும் விலக்கு அளிக்கப்படுகிறது. வணிக வளாகங்கள், பள்ளிகள், கல்லூரிகள், பயிற்சி நிறுவனங்கள், ஆராய்ச்சி நிறுவனங்கள் மற்றும் அனைத்துக் கல்வி நிறுவனங்களுக்கான தடை தொடரும் . எனினும், இந்நிறுவனங்கள் இணைய வழிக் கல்வி கற்றல் தொடர்வதுடன், அதனை ஊக்குவிக்கலாம். மத்திய உள் துறை அமைச்சகத்தால் அனுமதிக்கப்பட்ட பணிகளைத் தவிர சர்வதேச விமான போக்குவரத்திற்கான தடை நீடிக்கும். மெட்ரோ ரயில் / மின்சார ரயில். திரையரங்குகள், உடற்பயிற்சிக் கூடங்கள், நீச்சல் குளங்கள், கேளிக்கைக் கூடங்கள், மதுக்கூடங்கள், பெரிய அரங்குகள், கூட்ட அரங்குகள், கடற்கரை, சுற்றுலாத் தலங்கள், உயிரியல் பூங்காக்கள், அருங்காட்சியகங்கள் போன்ற பொது மக்கள் அதிகம் கூடும் இடங்களுக்கான தடை தொடரும். அனைத்து வகையான சமுதாய, அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, கலாச்சார நிகழ்வுகள், சமய, கல்வி, விழாக்கள், கூட்டங்கள் மற்றும் ஊர்வலங்கள். மாநிலங்களுக்குள் உள்ள பொது மற்றும் தனியார் பேருந்து போக்குவரத்து மற்றும் மாநிலங்களுக்கு இடையேயான பொது மற்றும் தனியார் பேருந்து போக்குவரத்துக்கான தடை தொடரும். மேற்கண்ட கட்டுப்பாடுகளில், தொற்றின் தன்மைக்கேற்றவாறு, படிப்படியாக தளர்வுகள் அளிக்கப்படும். இவ்வாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
மினி பான் கேக்18 hours 3 min ago |
ஸ்வீட் பால்.4 days 13 min ago |
உருளைக்கிழங்கு டோனட்6 days 23 hours ago |
-
மாணவிகளை தவறாக வழிநடத்திய வழக்கு: பேராசிரியை நிர்மலா தேவிக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை
30 Apr 2024விருதுநகர், மாணவிகளை தவறாக வழிநடத்திய வழக்கில் பேராசிரியை நிர்மலா தேவிக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
-
ஏற்காட்டில் தனியார் பேருந்து விபத்தில் 4 பேர் உயிரிழப்பு
30 Apr 2024ஏற்காடு : ஏற்காடு மலைப்பாதையில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 4 பேர் உயிரிழந்தனர்.
-
அடுத்த 3 நாட்கள் வெப்ப அலை வீசும்: தமிழக வட உள்மாவட்டங்களில் இன்று வெப்பம் மேலும் உயரும்
30 Apr 2024சென்னை : தமிழகத்தில் அடுத்த 3 நாட்கள் வெப்ப அலை வீசும் என்று தெரிவித்துள்ள சென்னை வானிலை ஆய்வு மையம், தமிழக வட உள்மாவட்டங்களில் இன்று வெப்பம் 5 டிகிரி செல்சியஸ் வரை மேல
-
தமிழ்நாட்டிற்கு மேலும் தண்ணீர் திறக்க முடியாது : ஒழுங்காற்று குழு கூட்டத்தில் கர்நாடகா பிடிவாதம்
30 Apr 2024புதுடெல்லி : சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி தமிழகத்திற்கு காவிரியில் 95 டி.எம்.சி நீர் வழங்க வலியுறுத்தப்பட்ட நிலையில் தமிழ்நாட்டிற்கு மேலும்
-
பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பாக கெஜ்ரிவாலை கைது செய்தது ஏன்? - அமலாக்கத்துறைக்கு சுப்ரீம் கோர்ட் கேள்வி
30 Apr 2024புதுடெல்லி : பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பாக கெஜ்ரிவாலை கைது செய்தது ஏன் ?
-
ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட வழக்கு: கைதான 2 பேர் நேரில் ஆஜராக சி.பி.சி.ஐ.டி. போலீசார் சம்மன்
30 Apr 2024சென்னை : ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில் கைதான 2 பேருக்கு சிபிசிஐடி போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர்.
-
விக்கிரவாண்டி தொகுதிக்கு இடைத்தேர்தல் எப்போது? - இந்த வாரம் அறிவிப்பு வெளியாக வாய்ப்பு
30 Apr 2024விக்கிரவாண்டி : விக்கிரவாண்டி தொகுதிக்கு இடைத்தேர்தல் தேதி இந்த வாரத்தில் வெளியாக வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
-
உலக கோப்பை தொடர்: இங்கி.-தென்னாப்பிரிக்கா டி-20 அணிகள் அறிவிப்பு
30 Apr 2024லண்டன் : டி-20 உலக கோப்பை தொடருக்கான இங்கிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்காஅணிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இன்றைக்குள்....
-
பெண்களுக்கு மாதம் ரூ.1500 பென்சன்: ஆந்திராவில் பா.ஜ. கூட்டணி தேர்தல் அறிக்கை வெளியீடு
30 Apr 2024அமராவதி : ஆந்திராவில் பெண்களுக்கு மாதம் ரூ.1500 பென்சன் உள்ளிட்ட வாக்குறுதிகள் அடங்கிய பா.ஜ.க. கூட்டணியின் தேர்தல் அறிக்கை நேற்று வெளியிடப்பட்டது.
-
ஊட்டி-கொடைக்கானல் செல்ல இ-பாஸ்: விரைவில் விதிமுறைகளை வெளியிடுகிறது தமிழக அரசு
30 Apr 2024சென்னை : ஊட்டி-கொடைக்கானல் செல்ல இ-பாஸ் விண்ணப்பிக்க விதிமுறைகளை தமிழக அரசு விரைவில் வெளியிடுகிறது.
-
டி-20 உலக கோப்பை தொடர்: இந்திய அணியில் சஞ்சு சாம்சன், சிவம் துபே, பண்ட் இடம்பிடிப்பு
30 Apr 2024புதுடெல்லி : டி-20 உலக கோப்பை தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
-
கொல்கத்தா வீரருக்கு தடை
30 Apr 2024ஐபிஎல் விதிகளை மீறியதற்காக கொல்கத்தா அணியின் பந்துவீச்சாளர் ஹர்ஷித் ராணாவுக்கு ஒரு போட்டியில் விளையாடத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
-
வரும் 10-ம் தேதி வரை வள்ளலார் சர்வதேச மைய கட்டுமான பணிகள் நிறுத்தம்
30 Apr 2024கடலூர் : தொல்லியல்துறை நிபுணர் குழு அறிக்கை அளிக்கும் வரை மே 10-ம் தேதி வரை வள்ளலார் சர்வதேச மைய கட்டுமானப் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளது.
-
டெல்லியை வீழ்த்தியது கொல்கத்தா
30 Apr 2024கொல்கத்தா : டெல்லியை வீழ்த்தியது கொல்கத்தா
டெல்லி பேட்டிங்...
-
சி.சி.டி.வி. ஒயர் இணைப்பில் பழுது: ஈரோடு தேர்தல் அதிகாரி விளக்கம்
30 Apr 2024ஈரோடு : ஒயர் இணைப்பில் பழுது காரணமாக சி.சி.டி.வி. கேமரா வேலை செய்யவில்லை என்று ஈரோடு தேர்தல் அதிகாரி விளக்கமளித்துள்ளார்.
-
மணீஷ் சிசோடியாவின் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி
30 Apr 2024புதுடெல்லி : டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவின் ஜாமீன் மனுக்களை தள்ளுபடி செய்து கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
-
டி20 உலகக் கோப்பை: இந்திய அணியின் துணை கேப்டன் ஆனார் ஹர்திக்
30 Apr 2024புதுடெல்லி : டி20 உலகக் கோப்பை போட்டி இந்திய அணியின் துணை கேப்டனாக ஹர்திக் பாண்ட்யா நியமிக்கப்பட்டுள்ளார்.
அமெரிக்காவில்...
-
விசாரணைக்கு ஆஜராகுவதில் பாபா ராம்தேவுக்கு விலக்கு : சுப்ரீம் கோர்ட் உத்தரவு
30 Apr 2024புதுடெல்லி : விசாரணைக்கு ஆஜராகுவதில் இருந்து பாபா ராம்தேவுக்கு விலக்கு அளித்து சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 01-05-2024
01 May 2024 -
சீனாவில் சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளம்: அடுத்தடுத்து வாகனங்கள் விழுந்ததில் 19 பேர் பலி
01 May 2024பெய்ஜிங் : சீனாவில் சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளத்தில் அடுத்தடுத்து வாகனங்கள் விழுந்ததில் 19 பேர் பலியானார்கள்.
-
தாய்லாந்தில் தமிழர்களின் நினைவை போற்றும் நடுகல் திறப்பு விழா : அமைச்சர் சிவசங்கர், அப்துல்லா எம்.பி. மரியாதை
01 May 2024பாங்காக் : தாய்லாந்து தமிழ் சங்கத்தின் சார்பில் நடைபெற்ற நடுகல் திறப்பு விழாவில் அமைச்சர் சிவசங்கர், அப்துல்லா எம்.பி. பங்கேற்று மரியாதை செலுத்தினர்.
-
கோர்ட் அவமதிப்பு வழக்கில் டிரம்புக்கு ரூ.7.5 லட்சம் அபராதம்
01 May 2024வாஷிங்டன் : கோரட் அவமதிப்பு வழக்கில் அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்புக்கு ரூ. 7.5 லட்சம் அபராதம் விதித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
-
பிரதமர் நெதன்யாகு ராஜினாமா: இஸ்ரேலில் அவசரநிலை பிரகடனம்
01 May 2024டெல் அவிவ் : இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ராஜினாமா செய்ததையடுத்து, அந்நாட்டில் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.
-
ஜிம்பாப்வேயில் புதிய நாணயம் அறிமுகம்
01 May 2024ஹராரே : ஜிம்பாப்வே நாடு புதிய நாணயத்தை வெளியிட்டுள்ளது, அதன் பெயர் ஜிக் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
-
வெயிலின் தாக்கம் அதிகரிப்பு: 20,701 மெகாவாட்டாக தமிழக மின்தேவை உயர்வு
01 May 2024சென்னை : தமிழக மின் தேவை நேற்று முன்தினம் எப்போதும் இல்லாத வகையில் 20 ஆயிரத்து 701 மெகாவாட் என்ற உச்சத்தை எட்டியுள்ளதாக மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.