எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அடுத்த 10 நாளில் அதாவது வருகிற 25-ம் தேதிக்குள் 45 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போட தமிழக அரசு அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது
தமிழகத்தில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருகிறது. இதையடுத்து சுகாதாரத்துறை அதிகாரிகள் அதனை கட்டுப்படுத்த பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள். 45 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போடும் பணி மாநிலம் முழுவதும் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இதுவரை 41 லட்சத்து 72 ஆயிரத்து 963 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. 60 வயதுக்கு மேற்பட்ட 14 லட்சத்து 11 ஆயிரத்து 194 பேரும், 45 வயதுக்கு மேற்பட்ட 13 லட்சத்து 93 ஆயிரத்து 811 பேரும் இதுவரை தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர்.
இந்த நிலையில் தமிழகம் முழுவதும் தடுப்பூசி திருவிழா நேற்று முன்தினம் தொடங்கப்பட்டது. இதையடுத்து இன்று வரை 3 நாட்கள் தொடர்ச்சியாக தடுப்பூசி போடும் பணி துரிதப்படுத்தப்பட்டுள்ளது. அனைத்து இடங்களுக்கும் சுகாதாரப் பணியாளர்கள் நேற்று நேரடியாக சென்று தடுப்பூசிகளை போட்டனர். இன்றும் இந்த பணி தொடர்கிறது.
இந்த நிலையில் அடுத்த 10 நாளில் வருகிற 25-ம் தேதிக்குள் 45 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போட தமிழக அரசு உத்தரவை பிறப்பித்துள்ளது. தமிழக அரசின் பொது சுகாதாரத்துறை இயக்குனர் டி.எஸ்.செல்வவிநாயகம் இதனை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது,
தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் தடுப்பூசி போடும் பணிகளை முழு வீச்சில் செயல்படுத்த மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குனர்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் தொடங்கி உள்ள தடுப்பூசி திருவிழாவை பயன்படுத்தி 45 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடுவதை சுகாதாரத்துறையினர் தீவிரப்படுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை உள்பட அனைத்து மாவட்டங்களிலும் 45 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொண்டு விட்டனர் என்கிற நிலையை ஏற்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளோம். இதற்காக அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்பட அரசு மருத்துவமனைகளில் போதுமான அளவுக்கு தடுப்பூசிகளை கையிருப்பு வைக்க அறிவுறுத்தி உள்ளோம். இதனை மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் மேற்பார்வையிட்டு செயல்படுத்த கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. தமிழகத்தில் 45 வயதுக்கு மேற்பட்டவர்களில் சுமார் 10 சதவீதம் பேரே தாங்களாக முன்வந்து தடுப்பூசியை போட்டுக் கொண்டுள்ளனர். பொதுமக்கள் மத்தியில் தடுப்பூசி போடுவதற்கு போதிய ஆர்வம் இல்லாமல் இருந்த நிலையில் கொரோனா அச்சம் காரணமாக பலர் தாமாகவே முன் வந்து தடுப்பூசி போட்டு வருகிறார்கள். இதனை அதிகப்படுத்த வாகனங்களில் விழிப்புணர்வு பிரசாரங்களையும் தீவிரமாக மேற்கொண்டுள்ளோம். வருகிற 25-ம் தேதிக்குள் 45 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கண்டிப்பாக தடுப்பூசி போட வேண்டும் என்பதை அந்தந்த பகுதியைச் சேர்ந்த சுகாதார அதிகாரிகள் உறுதி எடுத்து செயல்படுத்த கேட்டுக்கொண்டுள்ளோம். மத்திய அரசின் வழி காட்டுதலை பின்பற்றி சுகாதாரத்துறை வாகனங்களில் அனைத்து இடங்களுக்கும் சென்று போதுமான சுகாதாரப் பணியாளர்களை வைத்து தடுப்பூசி போடும் பணிகளை 100 சதவீதம் செயல்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது தவிர பொதுமக்கள் மத்தியில் தடுப்பூசி அச்சத்தை போக்குவதற்காக கலை நிகழ்ச்சிகள் மூலம் பிரச்சாரங்களை தீவிரமாக மேற்கொள்ள உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
மினி பான் கேக்2 days 22 hours ago |
ஸ்வீட் பால்.6 days 4 hours ago |
உருளைக்கிழங்கு டோனட்1 week 2 days ago |
-
தன்னிச்சையாக செயல்படுவதாக மேற்குவங்கம் குற்றச்சாட்டு:எங்கள் கட்டுப்பாட்டில் சி.பி.ஐ. அமைப்பு இல்லை சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு விளக்கம்
02 May 2024புதுடெல்லி: மத்திய அரசின் கட்டுப்பாட்டில் மத்திய புலனாய்வு அமைப்பு (சிபிஐ) இல்லை என்று சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
-
தமிழ்நாட்டில் மே 6 வரை வெப்ப அலை தொடரும் வானிலை ஆய்வு மையம் தகவல்
02 May 2024சென்னை: மே 6-ம் தேதி வரை வட தமிழக உள் மாவட்டங்களில் அநேக இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும்.
-
நாளை மறுதினம் நடைபெறவுள்ள நீட் நுழைவுத்தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு
02 May 2024புதுடெல்லி : வரும் 5-ம் தேதி நடைபெறவுள்ள நீட் தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களுக்கான ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளது.
-
ஜூன் 2-வது வாரம் தமிழக சட்டசபை கூட்டத்தொடர்?
02 May 2024சென்னை : மானிய கோரிக்கை மீதான விவாதம் நடத்துவதற்காக தமிழ்நாடு சட்டப் பேரவை ஜூன் 2-வது வாரம் கூட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
காவிரி நீர் விவகாரத்தில் கர்நாடக காங்கிரசை எதிர்த்து போராட தயார் : செல்வபெருந்தகை பேட்டி
02 May 2024சென்னை : காவிரி நீர் விவகாரத்தில் கர்நாடக காங்கிரசை எதிர்த்து போராட தயார் என்று தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வபெருந்தகை தெரிவித்தார்.
-
25 நாள் வாட்டி வதைக்க காத்திருக்கும் கத்தரி வெயில் நாளை தொடங்குகிறது
02 May 2024சென்னை : அக்னி நட்சத்திரம் என்று கூறப்படும் கத்தரி வெயில் காலம் ஒவ்வொரு ஆண்டும் மே மாதத்தில் இருக்கும்.
-
சிறையில் இருந்தபடி தலைவர்கள் பிரசாரம் செய்ய அனுமதி இல்லை : டெல்லி உயர் நீதிமன்றம் திட்டவட்டம்
02 May 2024புதுடெல்லி : சிறையில் இருந்தபடி தலைவர்கள் தேர்தல் பிரச்சாரம் செய்ய அனுமதிப்பது சட்டத்திற்கு முரணானது என்று டெல்லி உயர் நீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 03-05-2024.
03 May 2024 -
கடந்த 20 ஆண்டுகளில் ஐ.ஐ.டி மாணவர்கள் 115 பேர் தற்கொலை ஆர்டிஐ மூலம் வெளியான தகவலால் அதிர்ச்சி
02 May 2024சென்னை:கடந்த 20 ஆண்டுகளில் 115 ஐஐடி மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டு உயிரிழந்ததாக வெளியான தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
இந்திய டி-20 அணியில் சஞ்சு சாம்சன்,ரிஷப்பண்டை தேர்வு செய்தது ஏன்..?தேர்வுக் குழு தலைவர் அஜித் அகர்கர் விளக்கம்
02 May 2024புதுடெல்லி:இந்திய அணியில் சஞ்சு சாம்சன், ரிஷப்பண்டை தேர்வு செய்தது ஏன்? என்று தேர்வுக் குழு தலைவர் அஜித் அகர்கர் விளக்கமளித்துள்ளார்.
-
விதிகளுக்கு மாறாக நியமனம்: டெல்லி மகளிர் ஆணையத்தில் இருந்து 223 ஊழியர்கள் நீக்கம்
02 May 2024புதுடெல்லி : விதிகளுக்கு மாறாக ஊழியர்களை நியமனம் செய்ததாக எழுந்த குற்றச்சாட்டின் பேரில் டெல்லி மகளிர் ஆணையத்தில் இருந்து 223 ஊழியர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
-
வாகன நம்பர் பிளேட்டுகளில் ஸ்டிக்கர் ஒட்டக்கூடாது : விதிமுறை அமலுக்கு வந்தது
02 May 2024சென்னை : வாகன நம்பர் பிளேட்டுகளில் ஸ்டிக்கர் ஒட்டக்கூடாது என்ற விதிமுறை நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது.
-
ஆபாச வீடியோ விவகாரம்:பிரஜ்வல்லுக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ்
02 May 2024பெங்களூரு:ஆபாச வீடியோ வழக்கில் சிக்கிய ஹசன் எம்.பி., பிரிஜ்வல் ரேவண்ணாவுக்கு எதிராக லுக் அவுட் நோட்டீசை சிறப்பு புலனாய்வு குழுவினர் பிறப்பித்துள்ளனர்.
-
கொரோனா தடுப்பூசி சான்றிதழ்களில் இருந்து பிரதமர் மோடி படம் நீக்கம் : மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் விளக்கம்
02 May 2024புதுடெல்லி : கொரோனா தடுப்பூசி சான்றிதழ்களில் இருந்து பிரதமர் மோடி புகைப்படம் நீக்கப்பட்டது குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அளித்துள்ளது.
-
கெஜ்ரிவால் கைதுக்கு எதிர்ப்பு: கையெழுத்து இயக்கத்தை தொடங்கியது ஆம் ஆத்மி
02 May 2024புதுடெல்லி : டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து ஆம் ஆத்மி கட்சி கையெழுத்து இயக்கத்தைத் தொடங்கியது.
-
ஏப்ரலில் 80.87 லட்சம் பேர் மெட்ரோ ரயிலில் பயணம்
02 May 2024சென்னை : சென்னையில் மெட்ரோ ரயில்களில் ஏப்ரல் மாதத்தில் 80,87,712 பயணிகள் பயணம் செய்துள்ளதாக மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.
-
நிதி உதவி வழங்காமல் மாநில அரசுகளை வஞ்சித்து வருகிறது : மத்திய அரசு மீது மம்தா குற்றச்சாட்டு
02 May 2024கொல்கத்தா : நிதி உதவி வழங்காமல் மாநில அரசுகளை மத்திய அரசு வஞ்சித்து வருகிறது என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி குற்றஞ்சாட்டியுள்ளார்.
-
வாக்காளர்கள் பெயர் நீக்கம் தொடர்பான புகார்:பார்லி. தேர்தல் முடிந்த பின் நடவடிக்கை எடுக்கப்படும் தமிழ்நாடு தேர்தல் ஆணையம் தகவல்
02 May 2024சென்னை:வாக்காளர்கள் பெயர் நீக்கம் தொடர்பான புகார்களை பாராளுமன்ற தேர்தல் முடிந்த பிறகு ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழ்நாடு தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளத
-
கோவில் திருவிழா வழிபாடு தொடர்பாக சேலத்தில் இருதரப்பினரிடையே மோதல் - கடைகளுக்கு தீ வைப்பு நூற்றுக்கணக்கான போலீஸார் குவிப்பு
02 May 2024சேலம்: சேலம் மாவட்டம் தீவட்டிப்பட்டி மாரியம்மன் கோவில் திருவிழாவில் வழிபாடு நடத்துவது தொடர்பாக இருதரப்பினரிடையே ஏற்பட்ட மோதல் காரணமாக கடைகள் தீ வைத்து எரிக்கப்பட்டதுடன்
-
பொதுத்தேர்வில் ஆப்சென்ட் ஆன 10, 12-ம் வகுப்பு மாணவர்கள் மீண்டும் தேர்வு எழுத வாய்ப்பு
02 May 2024சென்னை : 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் ஆப்சென்ட் ஆன மாணவர்களை கண்டறிந்து அவர்களுக்கு துணை தேர்வு எழுத நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை சார்ப
-
தமிழ் சினிமாவின் பிரபல பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
02 May 2024சென்னை : தமிழ் சினிமாவின் பிரபல பின்னணி பாடகி உமா ரமணன், 69 உடல் நலக்குறைவால் சென்னையில் காலமானார்.
-
ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனின் சகோதரி மயூர்பஞ்ச் தொகுதியில் போட்டி
02 May 2024புவனேஸ்வர் : ஒடிசாவின் மயூர்பஞ்ச் மக்களவை தொகுதியில் ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனின் சகோதரி அஞ்சனி சோரன் போட்டியிடுகிறார்.
-
மேதகு பட இசையமைப்பாளர் பிரவீன்குமார் காலமானார்
02 May 2024சென்னை : மேதகு, ‘ராக்கதன் உள்ளிட்ட படங்களின் இசையமைப்பாளர் பிரவீன் குமார் உடல்நல பாதிப்பு காரணமாக உயிரிழந்தார். அவருக்கு வயது 28.
-
நிலவின் பள்ளங்களில் உறைந்த பனிக்கட்டிகள் : இஸ்ரோவின் ஆய்வில் கண்டுபிடிப்பு
02 May 2024சென்னை : நிலவின் பள்ளங்களில் நீர் பனிக்கட்டிகள் உறைந்த நிலையில் இருப்பது இஸ்ரோவின் ஆய்வில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
-
தஞ்சை பெரிய கோயில் விவகாரத்தில் அவதூறு பரப்புவேர் மீது நடவடிக்கை : தமிழக அரசு எச்சரிக்கை
02 May 2024சென்னை : தஞ்சை பெருவுடையார் திருக்கோயிலை சிதைக்கும் நோக்கில் இந்து சமய அறநிலையத் துறை செயல்பட்டு வருவதாக தவறான செய்தி வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.