முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கொரோனா முன்கள பணியாளர்களாக உழைக்கும் பத்திரிகையாளர்களை அறிவித்த ஒடிசா முதல்வர் பட்நாயக்

ஞாயிற்றுக்கிழமை, 2 மே 2021      இந்தியா
Image Unavailable

Source: provided

புவனேஸ்வர் : ஒடிசா மாநிலத்தில் உழைக்கும் பத்திரிகையாளர்களை, கொரோனா முன்கள பணியாளர்களாக அறிவித்துள்ளார் முதல்வர் நவீன் பட்நாயக். 

உழைக்கும் பத்திரிகையாளர்கள் தடையின்றி செய்திகளை வழங்குவதன் மூலமும், கொரோனா தொடர்பான பிரச்சினைகள் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதன் மூலமும், கொரோனாவுக்கு எதிரான போருக்கு அவர்கள் பெரும் ஆதரவாக இருப்பதன் மூலமும்,  அரசுக்கு சிறந்த சேவையைச் செய்கிறார்கள் என முதல்வர் கூறி உள்ளார். 

ஒடிசா முதல்வரின் இந்த அறிவிப்பால், மாநிலத்தின் 6944 பத்திரிகையாளர்கள் பயன் அடைவார்கள். கோபபந்து சம்பாடிகா ஸ்வஸ்திய பீமா யோஜனா திட்டத்தின் கீழ் 6944 உழைக்கும் பத்திரிகையாளர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தலா ரூ .2 லட்சம் சுகாதார காப்பீடு கிடைக்கும்.  இதுதவிர, கொரோனாவால் உயிரிழக்கும் பத்திரிகையாளர்களின் குடும்பத்தினருக்கு 15 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும், என முதல்வர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

ஒடிசாவில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த வரும் 5-ம்தேதி முதல் 19-ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சுகாதார பணிகள் மற்றும் பிற அவசர சேவைகளுக்கு எந்த கட்டுப்பாடுகளும் கிடையாது. காய்கறி வாங்க செல்வோர், காலை 7 மணியில் இருந்து மதியம் 12 மணிக்குள், தங்கள் இருப்பிடங்களில் இருந்து 500 மீட்டர் தொலைவுக்குள் உள்ள கடைகளில் வாங்கிக் கொள்ள வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து