Idhayam Matrimony

தடுப்பூசி தொழில் நுட்பங்களை பகிர்ந்து கொள்ள வேண்டும்: உலக நாடுகளுக்கு நிர்மலா சீதாராமன் அறிவுறுத்தல்

செவ்வாய்க்கிழமை, 4 மே 2021
Image Unavailable

தடுப்பூசி தொழில் நுட்பங்களை பகிர வேண்டும் எனவும், தடுப்பூசியில் தேசியவாதம் இருக்க முடியாது எனவும் உலக நாடுகளுக்கு நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வேண்டுகோள் விடுத்துள்ளார். 

ஆசிய வளர்ச்சி வங்கியின் கருத்தரங்கு ஒன்றில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மெய்நிகர் முறையில் உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது, 

தடுப்பூசி அடிப்படையிலான தொழில்நுட்பங்களை பகிர்வதற்கு உலக நாடுகள் வெளிப்படையாக இருக்க வேண்டும். இந்த அடிப்படையில் டிரிப்ஸ் ஒப்பந்தத்தை நாம் அணுக வேண்டும். தடுப்பூசியில் தேசியவாதம் இருக்க முடியாது. இந்த விவகாரத்தில் நாடுகள் நெகிழ்வுத்தன்மையுடன் இருக்க வேண்டும். கொரோனாவை கையாளுவதற்கு உலகளாவிய பலதரப்பு அணுகுமுறைகளை கொண்டிருக்க வேண்டிய அவசியம் உள்ளது. திறந்த தன்மை, வெளிப்படைத்தன்மை, நேர்மை, நிலைத்தன்மை மற்றும் அனைத்தையும் உள்ளடக்கிய கொள்கைகளின் அடிப்படையில் கொரோனாவுக்கு பிந்தைய எதிர்காலம் இருக்க வேண்டும்.  இந்த நெருக்கடியான காலகட்டத்தில் பொருளாதாரத்தின் சக்கரங்களை இயங்க வைப்பதற்காக பல்வேறு துறைகளுக்கு நிதி உதவியை அரசு வழங்கியது.  சிறு, குறு, நடுத்தர தொழில்கள் துறை பொருளாதாரத்தின் முதுகெலும்பாக இருக்கும் நிலையில், இந்த கொரோனா காலத்தில் இந்த துறைகளுக்கு உதவுவதற்காக ரூ.3 லட்சம் கோடி கடன் உத்தரவாத அடிப்படையில் அரசு நிதி உதவிகளை வழங்கியுள்ளது.  பருவநிலை மாற்றத்தை பொறுத்தவரை, பாரீஸ் ஒப்பந்த அடிப்படையிலான அனைத்து கடமைகளையும் நிறைவேற்றுவதில் இந்தியா உறுதிப்பாட்டுடன் உள்ளது. அவற்றை நிறைவேற்றுவது நிச்சயமாகவே நல்லது.  இவ்வாறு நிர்மலா சீதாராமன் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து