முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி: ஜெர்மனி வீரரை போராடி வீழ்த்தி 4-வது சுற்றுக்கு பெடரர் தகுதி

ஞாயிற்றுக்கிழமை, 6 ஜூன் 2021      விளையாட்டு
Image Unavailable

Source: provided

பாரிஸ் : பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியில் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் மூன்றாவது சுற்றில் சுவிட்சர்லாந்து வீரர் ரோஜர் பெடரர், ஜெர்மன் வீரர் டொமினிக் கோப்ஃபெர் ஆகியோர் மோதினர்.

இதில், அனுபவ வீரரான பெடரர் முதல் செட்டை 7-6 என கைப்பற்றினார். இரண்டாவது செட்டை ஜெர்மனி வீரர் 7-6 என கைப்பற்றினார். மூன்றாவது செட்டை பெடரர் 7-6 கைப்பற்றினார். நான்காவது செட்டையும் 7-5 என கைப்பற்றினார்.

இறுதியில் பெடரர் 7-6, 6-7, 7-6, 7-5 என்ற கணக்கில் ஜெர்மனி வீரரை போராடி வென்று நான்காவது சுற்றுக்கு முன்னேறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து