Idhayam Matrimony

வண்டலூர் உயிரியல் பூங்காவில் மனித குரங்கு குட்டி ஈன்றது

வெள்ளிக்கிழமை, 11 ஜூன் 2021      தமிழகம்
Image Unavailable

Source: provided

வண்டலூர் : சென்னையை அடுத்த வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா 1,265 ஏக்கர் பரப்பில் இயற்கையான சூழலில் அமைந்துள்ளது. இங்கு அனைத்து வசதிகளுடன் இயற்கை சூழலில் 170 வகையிலான 2 ஆயிரத்து 200 விலங்குகள் பராமரிக்கப்படுகின்றன. உயிரியல் பூங்காவில் சிங்கப்பூரில் இருந்து கொண்டு வரப்பட்ட ஆண், பெண் என 2 மனித குரங்குகள் உள்ளன. 

பூங்காவில் நுழைந்ததுமே பார்வையாளர்கள் பார்வையில் படுவது இந்த மனித குரங்குகளின் இருப்பிடம் தான். இந்த 2 மனித குரங்குகளுக்கும் ஒரு செயற்கை குகை உருவாக்கப்பட்டு அதில் அடைக்கப்பட்டுள்ளன. இவை பல்வேறு சேட்டைகளை செய்து பார்வையாளர்களை உற்சாகப்படுத்தும், மேலும் அதனுடைய இருப்பிடத்தில் உள்ள ஊஞ்சலில் ஏறி கால் மேல் கால் போட்டு அமர்ந்து பல்வேறு சேட்டைகளை செய்து பார்வையாளர்களை மகிழ்ச்சிப்படுத்தும்.

இந்த 2 மனித குரங்குகளும் தர்பூசணி, லஸ்ஸி போன்றவற்றை விரும்பி சாப்பிடும், மேலும் ஆரஞ்சு, கொய்யா, வாழைப்பழம் உள்பட பல்வேறு பழங்களை தினந்தோறும் உணவாக பூங்கா நிர்வாகம் கொடுத்து வருகிறது.

இந்த நிலையில் கடந்த ஆண்டு கொரோனா தொற்று காரணமாக மார்ச் மாதம் 17-ந்தேதி முதல் நவம்பர் 10-ந்தேதி வரை வண்டலூர் உயிரியல் பூங்காவை பொதுமக்கள் சுற்றி பார்க்க தடைவிதித்து மூடப்பட்டிருந்தது. இந்த காலகட்டத்தில் பூங்காவில் அமைதியான சூழல் மற்றும் பார்வையாளர்கள் தொந்தரவு இல்லாத காரணத்தினால் பூங்காவில் உள்ள சிங்கப்பூர் மனிதகுரங்கு ஜோடி கவுரி, கோம்பி ஆகிய இரண்டுக்கும் காதல் மலர்ந்து ஒன்றோடு ஒன்று இணை சேர்ந்த காரணத்தால் 230 நாள் முதல் 240 நாள் கர்ப்ப காலம் முடிந்து சில தினங்களுக்கு முன்பு மனித குரங்கு கவுரி அழகான மனித குரங்கு குட்டி ஒன்றை ஈன்றது. வண்டலூர் உயிரியல் பூங்காவில் பராமரிக்கப்படும் மனித குரங்கு 20 ஆண்டுகளுக்கு பிறகு குட்டி ஈன்றதால் பூங்காவில் உள்ள டாக்டர்கள், அதிகாரிகள், ஊழியர்கள் அனைவரும் மகிழ்ச்சி அடைந்தனர்.

தற்போது உயிரியல் பூங்காவில் சிங்கங்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள காரணத்தால் புதிதாக பிறந்த மனித குரங்கு குட்டியை பூங்கா டாக்டர்கள் மிகுந்த கவனத்துடன் அதனுடைய இருப்பிடத்தில் நல்ல முறையில் 24 மணி நேரமும் கண்காணித்து வருகின்றனர். தற்போது மனித குரங்கு குட்டியும், தாயும் ஆரோக்கியத்துடன் உள்ளன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து