எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஊட்டி, ஏப்.- 7 - இந்த ஆட்சி எப்போது போகும் என்ற அளவிற்கு மக்களை ஏங்க வைத்தவர் கருணாநிதி என்று ஊட்டியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் அ.தி.மு.க.,பொதுச்செயலாளர் ஜெயலலிதா பேசினார். தமிழகத்தில் வரும் 13-ந் தேதி சட்டமன்ற தேர்தல் ஒரே கட்டமாக நடைபெறுகிறது. இதனையொட்டி அ.தி.மு.க.பொதுச்செயலாளர் ஜெயலலிதா தமிழகம் முழுவதும் கடந்த 13 நாட்களாக சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு அ.தி.மு.க.,மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்து வாக்கு சேகரித்து வருகிறார். இந்த நிலையில் 14-வது நாளான நேற்று மதியம் கோவையிலிருந்து ஹெலிகாப்டர் மூலம் புறப்பட்ட ஜெயலலிதா ஊட்டியிலுள்ள தீட்டுக்கல் ஹெலிகாப்டர் தளத்தில் பிற்பகல் 2.30 மணிக்கு வந்திறங்கினார். அவருக்கு கழக அமைப்பு செயலாளர் தம்பிதுரை, அ.தி.மு.க.மாவட்ட செயலாளர் எம்.செல்வராஜ், முன்னாள் அமைச்சர் அ.மில்லர், நகர செயலாளர் டி.கே.தேவராஜ், வேட்பாளர்கள் புத்தி சந்திரன், எஸ்.செல்வராஜ், பெள்ளி சிறப்பான வரவேற்பு கொடுத்தனர். தீட்டுக்கல்லில் இருந்து வேனில் புறப்பட்டு படகு இல்லம் வழியாக மத்திய பேருந்து நிலையம் பகுதியில் அமைந்துள்ள ரவுண்டானாவிற்கு வந்தார். ஜெயலலிதா வருவதை அறிந்த வர்ண பகவான் நேற்று காலையில் ஊட்டி நகரில் மழையை பொழிய வைத்து நகரை சுத்தப்படுத்தினார். ஊட்டிக்கு வந்த ஜெயலலிதாவிற்கு வழிநெடுகிலும் செண்டை மேளம் முழங்க, காவடியாட்டத்துடன் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் பிரச்சார மேடை அமைக்கப்பட்டிருந்த மின்வாரிய ரவுண்டானா பகுதிக்கு வந்த ஜெயலலிதா அங்கு கூடியிருந்த பல்லாயிரக்கணக்கான மக்களிடம் அ.தி.மு.க.,மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து 16 நிமிட நேரம் பிரச்சாரம் செய்து வாக்கு சேகரித்தார். அப்போது அவர் பேசியதாவது:
என்னை வாழ வைக்கும் தெய்வங்களாகிய தாய்மார்களே, என் ரத்தத்தின் ரத்தமான உயிரினும் மேலான எனது அருமை உடன்பிறப்புகளே, வாக்காளப் பெருமக்களே அனைவருக்கும் அன்புகலந்த வணக்கம். நடைபெற இருக்கின்ற தேர்தல் கொடுங்கோல் குடும்ப ஆட்சிக்கு முடிவுகட்டுகிற, தமிழகத்திற்கு சுதந்திரம் பெற்றுத்தருகிற தேர்தல். ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு மிகவும் இன்றியமையாதது அந்த நாட்டின் சட்டம் ஒழுங்கு மற்றும் மின்சார உற்பத்திதான். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுப்போய் உள்ளது. இவற்றையெல்லாம் சீர்குலைத்தவர் கருணாநிதி. இவரால் தான் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டு விவசாயம் குறைந்து விலைவாசி விஷம்போல் ஏறிவிட்டது. சட்டம் ஒழுங்கை சீர்குலைய வைத்தது கருணாநிதியும் அவருடைய மகனும் தான். தா.கிருஷ்ணன் கொலை வழக்கு, மதுரை பத்திரிகை அலுவலகம் தீவைத்து எரிப்பு, அரசு அதிகாரி பழிவாங்குதல் போன்றவை குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆள்கடத்தல் வழக்கில் ஈடுபட்ட என்.கே.கே.பி.ராஜா மீது கருணாநிதி நடவடிக்கை எடுத்தாரா? அமைச்சர் பருதி இளம்வழுதி தேசிய கட்சி அலுவலகத்தை தாக்கிய போது கருணைநிதி ஏதாவது நடவடிக்கை எடுத்தாரா? அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் கொலைகுற்றவாளியை சிறையில் சென்று
சந்தித்து ஆறுதல் கூறினாரே நடவடிக்கை எடுத்தாரா கருணாநிதி? ஹார்லிக்ஸ் திருட்டு வழக்கு குறித்து ஏதாவது மேல் நடவடிக்கை எடுக்கப்பட்டதா? இப்படி எதற்கும் திரானியற்ற முதலமைச்சர் சட்டம் ஒழுங்கைப்பற்றி பேசுகிறார். இதைப்பற்றி பேச கருணாநிதிக்கு என்ன யோக்கியதை இருக்கிறது.
இந்த மைனாரிட்டி தி.மு.க.,ஆட்சியில் எங்குபார்த்தாலும் கொலை, தற்கொலை, கொள்ளை, கற்பழிப்புகள் நடைபெற்றுக்கொண்டே இருக்கின்றன. மின்சாரத்தை பொறுத்தவரை மின்வெட்டுதான் கடந்த 5 ஆண்டுகளாக அமலில் இருக்கிறது. மின்வெட்டுக்கும், மின் உற்பத்திக்குமான இடைவெளி அதிகரித்துக்கொண்டே போகிறது. இதனால் மின்வெட்டு நேரமும் அதிகரித்துக் கொண்டே போகிறது.மின்மிகை மாநிலமாக இருந்த மாநிலத்தை மின் பற்றாக்குறை மாநிலமாக மாற்றியதுதான் கருணாநிதி 5 ஆண்டுகால சாதனை. சட்டம் ஒழுங்கு சீர்கெட்டிருப்பதாலும், மின்வெட்டு அதிகரித்து கொண்டிருப்பதாலும் தமிழகத்தில் அனைத்து தொழில்களும் நலிவடைந்துவிட்டன. விலைவாசி உயர்ந்து கொண்டே செல்கிறது. வேலையில்லா திண்டாட்டம் பெருகி விட்டது. எங்கு பார்த்தாலும் லஞ்சம் தலைவிரித்தாடுகிறது. இந்த ஆட்சி எப்போது போகும் என்ற அளவிற்கு மக்கள் ஏங்கும் நிலைக்கு தமிழ்நாட்டை சீரழித்து விட்டார் கருணாநிதி. கருணாநிதியைப் பொறுத்தவரை தன்குடும்பம் மட்டும் நன்றாக இருக்க வேண்டும் என்ற ஒரே நோக்கம் தான். தன் குடும்ப உறுப்பினர்களைத்தவிர யாரும் எந்த தொழிலும் செய்யக்கூடாது என்பதுதான் அவரது எண்ணம். திரைப்படத்தொழில் கருணாநிதியின் குடும்பத்தொழில் ஆகிவிட்டன. பத்திரிகைத்துறையையும் கருணாநிதி குடும்பத்தினர் கபளிகரம் செய்துவிட்டனர். இயற்கை வளங்களான மணல், கிரானைட் போன்றவற்றை கருணாநிதி குடும்பத்தினர்தான் கொள்ளையடிக்கின்றனர். கொடுங்கோல் ஆட்சி செய்பவர் கருணாநிதி குடும்பத்தினர் தான். கேபிள்டிவி தொழிலும் கருணாநிதி குடும்ப வசம் விட்டது. மீதி இருக்கின்ற தொழில்களை அபகரிக்கத்தான் 6-வது முறையாக தன்னை முதலமைச்சராக வருவதற்கு கருணாநிதி உங்களை நாடி வந்துகொண்டிருக்கிறார். வாக்காளப் பெருமக்களே ஏமாந்து விடாதீர்கள்.
தமிழின பாதுகாவலர் என்று சொல்லியே தமிழினத்தை அழிக்க உறுதுணையாக இருந்தவர் கருணாநிதி. இலங்கையில் போர் நடந்துகொண்டிருந்த போது மத்திய அரசுக்கு அளித்து வந்த ஆதரவு வாபஸ் என்ற கோஷத்தை கருணாநிதி பயன்படுத்தியிருந்தால் அங்கு போர் நின்றிருக்கும். ஆனால் உண்ணாவிரதம் என்ற நாடகத்தை நடத்தி, 3 மணி நேரத்தில் போர் நின்றுவிட்டது என்று தெரிவித்து உண்ணாவிரத நாடகத்தை முடித்துவிட்டார். இதன் விளைவாக ஆயிரக்கணக்கான தமிழர்கள் ஒரே நாளில் இலங்கையில் கொல்லப்பட்டனர். கல்நெஞ்சம் கொண்ட கருணாநிதி அதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது அ.தி.மு.க.வின் ஆதரவு மத்திய அரசுக்கு இருந்திருந்தால், நிச்சயமாக மத்திய அரசுக்கான ஆதரவை திரும்ப பெற்றிருப்போம். தமிழினத்தை பாதுகாத்திருப்போம். ஆனால் கருணாநிதியோ தன் இனத்தை அழித்து தன் இனத்தை பாதுகாத்துக் கொண்டார். இப்படிப்பட்ட கருணாநிதியை எதற்கு 6-வது முறையாக முதலமைச்சராக தேர்ந்தெடுக்க வேண்டும். வாக்காளப் பெருமக்களே சிந்தித்து செயல்படுங்கள். செம்மொழி மாநாடு நடத்தி தமிழ்மொழிக்கு முன்னுரிமை என்று சொல்லி, கனிமொழிக்கு முன்னுரிமை கொடுத்தவர் கருணாநிதி. இப்படிப்பட்டவருக்கு எதற்காக முதலமைச்சர் பதவி. வாக்காளப் பெருமக்களே சிந்தித்து வாக்களியுங்கள்.
2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலில் நாட்டின் ஒட்டுமொத்த சொத்தை கருணாநிதி, தயாளு, ராசாத்தி, கனிமொழி ஆகியோர் கொள்ளையடித்து கருணாநிதி குடும்பத்திற்கு சென்றுவிட்டது. மாட்டிக்கொண்டது தமிழ் சமுதாயத்தைச் சேர்ந்த ராசா, பலியானது இஸ்லாமிய சமுதாயத்தைச் சேர்ந்த சாதிக்பாட்ஷா. இவ்வளவு நடந்தும் கருணாநிதியும் அவரது குடும்ப உறுப்பினர்களும் வெட்கமில்லாமல் உங்களிடம் வாக்கு கேட்டு வந்து கொண்டிருக்கிறார்கள். எதற்கு இந்த நாட்டை மீண்டும் கொள்ளையடிப்பதற்கு ! ஊழல் நடந்து மூன்று ஆண்டுகளாகி விட்டது. அரசன் அன்று கொள்வான். தெய்வம் நின்று கொல்லும். ஆட்சி அதிகாரம் போய்விடும் என்ற நோக்கில் மத்திய அரசு வழக்கை தாமதப்படுத்துகிறது. தமிழக மக்களாகிய நீங்கள் தான் தெய்வங்கள். கருணாநிதி குடும்பத்தை தண்டிக்கும் சக்தி உங்களிடம் உள்ளது. நல்ல தீர்ப்பை தாருங்கள். தமிழகத்தை காப்பாற்ற அ.தி.மு.க., தலைமையிலான கூட்டணிக்கு வாக்களியுங்கள் என்று உங்களையெல்லாம் அன்போடு கேட்டுக்கொள்கிறேன். வாக்காளப்பெருமக்களே சிந்தியுங்கள். கருணாநிதியை இப்படியே விட்டுவிட்டால் தழிழக மக்களாகிய உங்களை எல்லாம் விட்டுவிட்டு தமிழ் நாட்டையே தன் குடும்ப வசம் ஆக்கிக்கொள்வார். உங்களை விரட்ட நினைக்கும் கருணாநிதியை நீங்கள் விரட்டி அடிக்க வேண்டும் செய்வீர்களா? நீங்கள் செய்வீர்களா? அதற்கு ஒரே வழிதான் உள்ளது. வரும் தேர்தல் நாளன்று நீங்கள் சிந்தித்து வாக்களித்து கருணாநிதியை குடும்பத்தோடு அப்புறப்படுத்த வேண்டும். கின்னஸ் புத்தகத்தில் இடம்பெறும் அளவிற்கு கருணாநிதி போட்டியிட்ட இடங்களிலெல்லாம் டெபாசிட் இழந்தது என்று வரலாற்று சாதனையை வாக்காளர் பெருமக்களாகிய நீங்கள் செய்து முடிக்க வேண்டும் செய்வீர்களா?.
புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரின் நல்லாசியுடனும், உங்களின் பேராதரவுடனும் மீண்டும் தமிழகத்தில் அ.தி.மு.க. தலைமையில் நல்லாட்சி அமைய அ.தி.மு.க.கூட்டணி கட்சி வேட்பாளர்களான ஊட்டி தொகுதியில் போட்டியிடும் அ.தி.மு.க.வேட்பாளர் புத்தி சந்திரனுக்கு புரட்சித்தலைவர் கண்ட வெற்றிச்சின்னமான இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து அவரை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச்செய்ய வேண்டுகிறேன். அதேபோல் குன்னூர் தொகுதியில் போட்டியிடு இ.கம்யூ.,வேட்பாளர் ஏ,பெள்ளிக்கு கதிர் அரிவாள் சின்னத்திலும், கூடலூர்(தனி) தொகுதியில் போட்டியிடும் தே.மு.தி.க.,வேட்பாளர் எஸ்.செல்வராஜ்க்கு அவருக்கு ஒதுக்கப்பட்ட சின்னத்திலும் வாக்களித்து அமோக வெற்றி பெறச்செய்யவேண்டுமாய் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.
இந்த பிரச்சார கூட்டத்தில் நீலகிரி மாவட்ட அ.தி.மு.க.,செயலாளர் எம்.செல்வராஜ், முன்னாள் அமைச்சர் அ.மில்லர், அவைத்தலைவர் தேனாடு லட்சுமணன், நகர செயலாளர்கள் டி.கே.தேவராஜ்(ஊட்டி), சத்தார்(குன்னூர்), ராஜாதங்கவேலு(கூடலூர்), முன்னாள் நகர செயலாளர்கள் கோபாலகிருஷ்ணன், டி.சுப்பிரமணி, சார்பு அமைப்பு மாவட்ட செயலாளர்கள் அனந்தகிருஷ்ணன்(வழக்கறிஞர் பிரிவு), எஸ்.கே.ஜி.சுரேஷ்குமார்(ஜெ.பேரவை), ராஜகோபால்(தொழிற்சங்கம்), ராஜாமுகமது(இளைஞரணி) நந்தகுமார்(மாணவரணி), வினோத்(பாசறை) குன்னூர் தொகுதி செயலாளர் கே.ஆர்.அர்ஜூணன், ஒன்றிய செயலாளர்கள் கடநாடு குமார்(ஊட்டி), கலைச்செல்வன்(குன்னூர்), உலிக்கல் சிவாஜி(மேலூர்), பச்சநஞ்சன்(கோத்தகிரி), ஸ்டீபன்(கீழ்கோத்தகிரி), ஏடிபி மாநில செயலாளர் ஜெயராமன், எல்.மணி, பலராமன், மாயன், இம்தியாஸ், மகளிரணியைச் சேர்ந்த நாகரத்தினம், சத்தியபாமா, பார்வதி, மல்லிகா, சிக்கந்தர் பாஷா, சிவசக்தி குமார், வினித்குமார், அக்கீம் பாபு, எச். நாராயணன், ஊட்டி கே.பாபு, கே.சந்திரன், கரன்சி சிவக்குமார் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் உட்பட பல்லாயிரணக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
மினி பான் கேக்2 days 16 hours ago |
ஸ்வீட் பால்.5 days 22 hours ago |
உருளைக்கிழங்கு டோனட்1 week 1 day ago |
-
தன்னிச்சையாக செயல்படுவதாக மேற்குவங்கம் குற்றச்சாட்டு:எங்கள் கட்டுப்பாட்டில் சி.பி.ஐ. அமைப்பு இல்லை சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு விளக்கம்
02 May 2024புதுடெல்லி: மத்திய அரசின் கட்டுப்பாட்டில் மத்திய புலனாய்வு அமைப்பு (சிபிஐ) இல்லை என்று சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
-
தமிழ்நாட்டில் மே 6 வரை வெப்ப அலை தொடரும் வானிலை ஆய்வு மையம் தகவல்
02 May 2024சென்னை: மே 6-ம் தேதி வரை வட தமிழக உள் மாவட்டங்களில் அநேக இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும்.
-
ஒரு நொடி விமர்சனம்
02 May 2024ஒரு மனிதன் வாழ்வில் சில தவிர்க்க முடியாத காரணங்கள் ஒரு நொடியில் நடக்கும் அப்படிப்பட்ட நிகழ்வுதான்
-
நாளை மறுதினம் நடைபெறவுள்ள நீட் நுழைவுத்தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு
02 May 2024புதுடெல்லி : வரும் 5-ம் தேதி நடைபெறவுள்ள நீட் தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களுக்கான ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளது.
-
ஜூன் 2-வது வாரம் தமிழக சட்டசபை கூட்டத்தொடர்?
02 May 2024சென்னை : மானிய கோரிக்கை மீதான விவாதம் நடத்துவதற்காக தமிழ்நாடு சட்டப் பேரவை ஜூன் 2-வது வாரம் கூட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
அருண் விஜய் யின் “ரெட்ட தல”
02 May 2024BTG Universal நிறுவனத்தின் மூன்றாவது படைப்பாக,நடிகர் அருண் விஜய் நடிப்பில், மான் கராத்தே இயக்குநர் கிரிஷ் திருக்குமரன் இயக்கத்தில் உருவாகும் அதிரடி ஆக்சன் திரைப்படத்திற
-
காவிரி நீர் விவகாரத்தில் கர்நாடக காங்கிரசை எதிர்த்து போராட தயார் : செல்வபெருந்தகை பேட்டி
02 May 2024சென்னை : காவிரி நீர் விவகாரத்தில் கர்நாடக காங்கிரசை எதிர்த்து போராட தயார் என்று தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வபெருந்தகை தெரிவித்தார்.
-
25 நாள் வாட்டி வதைக்க காத்திருக்கும் கத்தரி வெயில் நாளை தொடங்குகிறது
02 May 2024சென்னை : அக்னி நட்சத்திரம் என்று கூறப்படும் கத்தரி வெயில் காலம் ஒவ்வொரு ஆண்டும் மே மாதத்தில் இருக்கும்.
-
சிறையில் இருந்தபடி தலைவர்கள் பிரசாரம் செய்ய அனுமதி இல்லை : டெல்லி உயர் நீதிமன்றம் திட்டவட்டம்
02 May 2024புதுடெல்லி : சிறையில் இருந்தபடி தலைவர்கள் தேர்தல் பிரச்சாரம் செய்ய அனுமதிப்பது சட்டத்திற்கு முரணானது என்று டெல்லி உயர் நீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
-
ராமம் ராகவம் இசை வெளியீடு
02 May 2024இயக்குநர் பாலா, அறிமுக இயக்குநர் தன்ராஜ் இயக்கத்தில், தயாரிப்பளர் பிருத்தவி போலவரபு தயாரிப்பில் சமுத்திரக்கனி நடித்திருக்கும் ராமம் ராகவம் திரைப்படத்தின் டீசர் வெளியீட்
-
வன்முறை போராட்டம் எதிரொலி: அமெரிக்க கல்லூரிகளில் கலவர தடுப்பு போலீசார் குவிப்பு
02 May 2024வாஷிங்டன் : காசாவில் இஸ்ரேல் நடத்தி வரும் போருக்கு எதிராக அமெரிக்க பல்கலைக் கழகங்களில் மாணவர்கள் போராட்டம் தீவிரமடைந்து வரும் நிலையில் அங்கு கலவர தடுப்பு போலீசார் குவிக
-
கடந்த 20 ஆண்டுகளில் ஐ.ஐ.டி மாணவர்கள் 115 பேர் தற்கொலை ஆர்டிஐ மூலம் வெளியான தகவலால் அதிர்ச்சி
02 May 2024சென்னை:கடந்த 20 ஆண்டுகளில் 115 ஐஐடி மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டு உயிரிழந்ததாக வெளியான தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 03-05-2024.
03 May 2024 -
விதிகளுக்கு மாறாக நியமனம்: டெல்லி மகளிர் ஆணையத்தில் இருந்து 223 ஊழியர்கள் நீக்கம்
02 May 2024புதுடெல்லி : விதிகளுக்கு மாறாக ஊழியர்களை நியமனம் செய்ததாக எழுந்த குற்றச்சாட்டின் பேரில் டெல்லி மகளிர் ஆணையத்தில் இருந்து 223 ஊழியர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
-
இந்திய டி-20 அணியில் சஞ்சு சாம்சன்,ரிஷப்பண்டை தேர்வு செய்தது ஏன்..?தேர்வுக் குழு தலைவர் அஜித் அகர்கர் விளக்கம்
02 May 2024புதுடெல்லி:இந்திய அணியில் சஞ்சு சாம்சன், ரிஷப்பண்டை தேர்வு செய்தது ஏன்? என்று தேர்வுக் குழு தலைவர் அஜித் அகர்கர் விளக்கமளித்துள்ளார்.
-
வாகன நம்பர் பிளேட்டுகளில் ஸ்டிக்கர் ஒட்டக்கூடாது : விதிமுறை அமலுக்கு வந்தது
02 May 2024சென்னை : வாகன நம்பர் பிளேட்டுகளில் ஸ்டிக்கர் ஒட்டக்கூடாது என்ற விதிமுறை நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது.
-
ஆபாச வீடியோ விவகாரம்:பிரஜ்வல்லுக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ்
02 May 2024பெங்களூரு:ஆபாச வீடியோ வழக்கில் சிக்கிய ஹசன் எம்.பி., பிரிஜ்வல் ரேவண்ணாவுக்கு எதிராக லுக் அவுட் நோட்டீசை சிறப்பு புலனாய்வு குழுவினர் பிறப்பித்துள்ளனர்.
-
கொரோனா தடுப்பூசி சான்றிதழ்களில் இருந்து பிரதமர் மோடி படம் நீக்கம் : மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் விளக்கம்
02 May 2024புதுடெல்லி : கொரோனா தடுப்பூசி சான்றிதழ்களில் இருந்து பிரதமர் மோடி புகைப்படம் நீக்கப்பட்டது குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அளித்துள்ளது.
-
கெஜ்ரிவால் கைதுக்கு எதிர்ப்பு: கையெழுத்து இயக்கத்தை தொடங்கியது ஆம் ஆத்மி
02 May 2024புதுடெல்லி : டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து ஆம் ஆத்மி கட்சி கையெழுத்து இயக்கத்தைத் தொடங்கியது.
-
ஏப்ரலில் 80.87 லட்சம் பேர் மெட்ரோ ரயிலில் பயணம்
02 May 2024சென்னை : சென்னையில் மெட்ரோ ரயில்களில் ஏப்ரல் மாதத்தில் 80,87,712 பயணிகள் பயணம் செய்துள்ளதாக மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.
-
உலகின் பெரும் பணக்காரர்களின் பட்டியலில் இணையும் சுந்தர் பிச்சை
02 May 2024வாஷிங்டன் : உலகின் பெரும் பணக்காரர்களின் பட்டியலில் சுந்தர்பிச்சை இணைந்துள்ளார்.
-
வாக்காளர்கள் பெயர் நீக்கம் தொடர்பான புகார்:பார்லி. தேர்தல் முடிந்த பின் நடவடிக்கை எடுக்கப்படும் தமிழ்நாடு தேர்தல் ஆணையம் தகவல்
02 May 2024சென்னை:வாக்காளர்கள் பெயர் நீக்கம் தொடர்பான புகார்களை பாராளுமன்ற தேர்தல் முடிந்த பிறகு ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழ்நாடு தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளத
-
நிதி உதவி வழங்காமல் மாநில அரசுகளை வஞ்சித்து வருகிறது : மத்திய அரசு மீது மம்தா குற்றச்சாட்டு
02 May 2024கொல்கத்தா : நிதி உதவி வழங்காமல் மாநில அரசுகளை மத்திய அரசு வஞ்சித்து வருகிறது என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி குற்றஞ்சாட்டியுள்ளார்.
-
கோவில் திருவிழா வழிபாடு தொடர்பாக சேலத்தில் இருதரப்பினரிடையே மோதல் - கடைகளுக்கு தீ வைப்பு நூற்றுக்கணக்கான போலீஸார் குவிப்பு
02 May 2024சேலம்: சேலம் மாவட்டம் தீவட்டிப்பட்டி மாரியம்மன் கோவில் திருவிழாவில் வழிபாடு நடத்துவது தொடர்பாக இருதரப்பினரிடையே ஏற்பட்ட மோதல் காரணமாக கடைகள் தீ வைத்து எரிக்கப்பட்டதுடன்
-
ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனின் சகோதரி மயூர்பஞ்ச் தொகுதியில் போட்டி
02 May 2024புவனேஸ்வர் : ஒடிசாவின் மயூர்பஞ்ச் மக்களவை தொகுதியில் ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனின் சகோதரி அஞ்சனி சோரன் போட்டியிடுகிறார்.