எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
நவம்பர் 1-ம் தேதி முதல் 1 முதல் 8-ம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்படும் என்றும், அக்டோபர் 31-வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாகவும் முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு.,
தமிழ்நாட்டில், கொரோனா நோய்த் தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில், தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நடைமுறையில் இருந்து வருகிறது. கொரோனா நோய்த் தொற்று பரவலைத் தொடர்ந்து கண்காணித்து கட்டுப்படுத்த எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும், அண்டை மாநிலங்களில் நோய்த் தொற்று நிலையினைக் கருத்தில் கொண்டும், தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நேற்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இதன் அடிப்படையில், எதிர்வரும் பண்டிகைக் காலங்களில் பொதுமக்கள் அதிகம் கூடுவதன் காரணமாக, கொரோனா நோய்த் தொற்று பரவக்கூடும் என்பதைக் கருத்தில் கொண்டும், நோய்த் தொற்று பரவலைக் கண்காணித்து தொடர்ந்து கட்டுப்படுத்த வேண்டிய அவசியத்தை கருத்தில் கொண்டும், 11.09.2021ன்படி, விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் 31.10.2021 காலை 6.00 மணி வரை தொடர்ந்து அமலில் இருக்கும்.
சமுதாயம், அரசியல், கலாச்சார நிகழ்வுகள், திருவிழாக்கள், குடமுழுக்கு உள்ளிட்ட செயல்பாடுகளுக்கு ஏற்கெனவே விதிக்கப்பட்ட தடை தொடர்ந்து நடைமுறையில் இருக்கும். நோய்த்தொற்று பரவாமல் இருக்க பெருமளவில் மக்கள் ஒன்று கூடக்கூடிய நாட்களாகிய வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய கிழமைகளில் அனைத்து வழிபாட்டு தலங்களும் தொடர்ந்து மூடப்பட்டு இருக்கும். மேலும், ஏற்கெனவே அனுமதிக்கப்பட்டுள்ள செயல்பாடுகள், விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளுடன் தொடர்ந்து அனுமதிக்கப்படும்.
பொதுமக்கள், தங்களது குறைகளுக்கு தீர்வு காணும் பொருட்டு, பல்வேறு மாவட்டங்களிலிருந்து சென்னைக்கு வருகை புரிந்து தலைமைச் செயலகத்தில் தங்களது கோரிக்கை மனுக்களை சமர்ப்பித்து வருகின்றனர், பொதுமக்களின் சிரமத்தை குறைக்கும் நோக்குடன், அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில், திங்கட்கிழமை தோறும், பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள், மாதந்தோறும் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் ஆகியவற்றை கொரோனா நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி நடத்த அனுமதிக்கப்படுகிறது.
மேலும், மருத்துவ நிபுணர்கள், கல்வியாளர்கள், பெற்றோர்களின் ஆலோசனையின்படி, 9, 10, 11 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவ மாணவிருக்காக பள்ளிகளும் மற்றும் கல்லூரிகளும் இயங்கி வருகின்றன. அதே போல், 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு பயிலும் மாணவ மாணவியர், பள்ளி செல்லாமல் பல மாதங்களாக தொடர்ந்து வீட்டிலேயே இருப்பது அவர்களிடையே பெரும் மன அழுத்தத்தையும் சமுதாயத்தில் பெரும் கற்றல் இடைவெளியையும் இழப்பையும் ஏற்படுத்தியுள்ளதாக மருத்துவ வல்லுநர்கள், கல்வியாளர்கள், பெற்றோர்கள் தெரிவித்ததைக் கருத்தில் கொண்டு, அனைத்து பள்ளிகளிலும், 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு மாணவ மாணவியருக்கான வகுப்புகள், கொரோனா நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி 01-11-2021 முதல் நடத்த அனுமதிக்கப்படும். அதற்கான முன்னேற்பாடுகளை பள்ளிக்கல்வித் துறை மேற்கொள்ள வேண்டும்.
கடைகளிலும், பொது மக்கள் கூடக்கூடிய இடங்களிலும் எதிர்வரும் பண்டிகைக் காலத்தைக் கருத்தில் கொண்டு, முக்கிய நிலையான வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்ற வேண்டும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. கடைகளின் நுழைவு வாயிலில், வாடிக்கையாளர் பயன்படுத்தும் வகையில் கை சுத்திகரிப்பான்கள் கட்டாயமாக வைக்கப்படுவதோடு, உடல் வெப்ப நிலை பரிசோதனை கருவி கொண்டு பரிசோதனை செய்ய வேண்டும்.
கடைகளில் பணிபுரிபவர்களும், வாடிக்கையாளர்களும் கட்டாயம் முகக்கவசம் அணிவதை சம்மந்தப்பட்ட நிர்வாகம் உறுதி செய்ய வேண்டும். அனைத்து கடைகளும், குளிர் சாதன வசதி இல்லாமல் செயல்படுவதோடு, கடைகளில், சமூக இடைவெளியை கடைப்பிடிக்கும் வகையில் ஒரே நேரத்தில் அதிகப்படியான நபர்களை அனுமதிக்கக்கூடாது. கடைகளின் நுழைவு வாயிலில் பொது மக்கள் வரிசையில் காத்திருக்கும் போது, ஒரு நபருக்கும் மற்றொருவருக்கும் இடையே போதுமான இடைவெளி இருக்கும் வகையில் குறியீடுகள் போடப்பட வேண்டும்.
வரையறுக்கப்பட்ட நோய்க் கட்டுப்பாட்டு பகுதிகளில், நோய்க் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் கண்டிப்பாக பின்பற்றப்பட வேண்டும். நோய்க் கட்டுப்பாட்டு பகுதிகளில் அத்தியாவசிய செயல்பாடுகளுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட வேண்டும். இந்த நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில், மருத்துவ அவசர சேவைகள் மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் வழங்குதல் தவிர, இதர செயல்பாடுகள் அனுமதி இல்லை.நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில், தீவிரமாக நோய்த் தொற்று பரவலை, வீடு வீடாக கண்காணிக்க குழுக்கள் அமைத்து கண்காணிக்கப்படும். கொரோனா நோய்த் தொற்று கட்டுப்பாடு நடைமுறைகள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு, விதிமீறல்களில் ஈடுபடுவர்கள் மீது அபராதம் விதிக்கப்படும்.
எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் பொதுமக்கள் மிகவும் கவனத்துடன் இருக்குமாறும், கூட்டம் கூடக்கூடிய இடங்களுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும் என்றும், உரிய கட்டுப்பாடுகளால் மட்டுமே கொரோனா 3வது அலையை தவிர்க்க இயலும் என்பதை உணர்ந்து அரசின் அனைத்து முயற்சிகளுக்கும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். அனைத்து வணிக நிறுவனங்களும் கட்டுப்பாட்டு விதிமுறைகளை தவறாது கடைபிடிக்க வேண்டும்.
இவ்வாறு முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
மினி பான் கேக்2 days 4 hours ago |
ஸ்வீட் பால்.5 days 10 hours ago |
உருளைக்கிழங்கு டோனட்1 week 1 day ago |
-
தன்னிச்சையாக செயல்படுவதாக மேற்குவங்கம் குற்றச்சாட்டு:எங்கள் கட்டுப்பாட்டில் சி.பி.ஐ. அமைப்பு இல்லை சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு விளக்கம்
02 May 2024புதுடெல்லி: மத்திய அரசின் கட்டுப்பாட்டில் மத்திய புலனாய்வு அமைப்பு (சிபிஐ) இல்லை என்று சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
-
நாளை மறுதினம் நடைபெறவுள்ள நீட் நுழைவுத்தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு
02 May 2024புதுடெல்லி : வரும் 5-ம் தேதி நடைபெறவுள்ள நீட் தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களுக்கான ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளது.
-
தமிழ்நாட்டில் மே 6 வரை வெப்ப அலை தொடரும் வானிலை ஆய்வு மையம் தகவல்
02 May 2024சென்னை: மே 6-ம் தேதி வரை வட தமிழக உள் மாவட்டங்களில் அநேக இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும்.
-
ஜூன் 2-வது வாரம் தமிழக சட்டசபை கூட்டத்தொடர்?
02 May 2024சென்னை : மானிய கோரிக்கை மீதான விவாதம் நடத்துவதற்காக தமிழ்நாடு சட்டப் பேரவை ஜூன் 2-வது வாரம் கூட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
ஒரு நொடி விமர்சனம்
02 May 2024ஒரு மனிதன் வாழ்வில் சில தவிர்க்க முடியாத காரணங்கள் ஒரு நொடியில் நடக்கும் அப்படிப்பட்ட நிகழ்வுதான்
-
சிறையில் இருந்தபடி தலைவர்கள் பிரசாரம் செய்ய அனுமதி இல்லை : டெல்லி உயர் நீதிமன்றம் திட்டவட்டம்
02 May 2024புதுடெல்லி : சிறையில் இருந்தபடி தலைவர்கள் தேர்தல் பிரச்சாரம் செய்ய அனுமதிப்பது சட்டத்திற்கு முரணானது என்று டெல்லி உயர் நீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
-
அருண் விஜய் யின் “ரெட்ட தல”
02 May 2024BTG Universal நிறுவனத்தின் மூன்றாவது படைப்பாக,நடிகர் அருண் விஜய் நடிப்பில், மான் கராத்தே இயக்குநர் கிரிஷ் திருக்குமரன் இயக்கத்தில் உருவாகும் அதிரடி ஆக்சன் திரைப்படத்திற
-
25 நாள் வாட்டி வதைக்க காத்திருக்கும் கத்தரி வெயில் நாளை தொடங்குகிறது
02 May 2024சென்னை : அக்னி நட்சத்திரம் என்று கூறப்படும் கத்தரி வெயில் காலம் ஒவ்வொரு ஆண்டும் மே மாதத்தில் இருக்கும்.
-
வன்முறை போராட்டம் எதிரொலி: அமெரிக்க கல்லூரிகளில் கலவர தடுப்பு போலீசார் குவிப்பு
02 May 2024வாஷிங்டன் : காசாவில் இஸ்ரேல் நடத்தி வரும் போருக்கு எதிராக அமெரிக்க பல்கலைக் கழகங்களில் மாணவர்கள் போராட்டம் தீவிரமடைந்து வரும் நிலையில் அங்கு கலவர தடுப்பு போலீசார் குவிக
-
ராமம் ராகவம் இசை வெளியீடு
02 May 2024இயக்குநர் பாலா, அறிமுக இயக்குநர் தன்ராஜ் இயக்கத்தில், தயாரிப்பளர் பிருத்தவி போலவரபு தயாரிப்பில் சமுத்திரக்கனி நடித்திருக்கும் ராமம் ராகவம் திரைப்படத்தின் டீசர் வெளியீட்
-
காவிரி நீர் விவகாரத்தில் கர்நாடக காங்கிரசை எதிர்த்து போராட தயார் : செல்வபெருந்தகை பேட்டி
02 May 2024சென்னை : காவிரி நீர் விவகாரத்தில் கர்நாடக காங்கிரசை எதிர்த்து போராட தயார் என்று தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வபெருந்தகை தெரிவித்தார்.
-
கடந்த 20 ஆண்டுகளில் ஐ.ஐ.டி மாணவர்கள் 115 பேர் தற்கொலை ஆர்டிஐ மூலம் வெளியான தகவலால் அதிர்ச்சி
02 May 2024சென்னை:கடந்த 20 ஆண்டுகளில் 115 ஐஐடி மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டு உயிரிழந்ததாக வெளியான தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
விதிகளுக்கு மாறாக நியமனம்: டெல்லி மகளிர் ஆணையத்தில் இருந்து 223 ஊழியர்கள் நீக்கம்
02 May 2024புதுடெல்லி : விதிகளுக்கு மாறாக ஊழியர்களை நியமனம் செய்ததாக எழுந்த குற்றச்சாட்டின் பேரில் டெல்லி மகளிர் ஆணையத்தில் இருந்து 223 ஊழியர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
-
கெஜ்ரிவால் கைதுக்கு எதிர்ப்பு: கையெழுத்து இயக்கத்தை தொடங்கியது ஆம் ஆத்மி
02 May 2024புதுடெல்லி : டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து ஆம் ஆத்மி கட்சி கையெழுத்து இயக்கத்தைத் தொடங்கியது.
-
ஆபாச வீடியோ விவகாரம்:பிரஜ்வல்லுக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ்
02 May 2024பெங்களூரு:ஆபாச வீடியோ வழக்கில் சிக்கிய ஹசன் எம்.பி., பிரிஜ்வல் ரேவண்ணாவுக்கு எதிராக லுக் அவுட் நோட்டீசை சிறப்பு புலனாய்வு குழுவினர் பிறப்பித்துள்ளனர்.
-
வாகன நம்பர் பிளேட்டுகளில் ஸ்டிக்கர் ஒட்டக்கூடாது : விதிமுறை அமலுக்கு வந்தது
02 May 2024சென்னை : வாகன நம்பர் பிளேட்டுகளில் ஸ்டிக்கர் ஒட்டக்கூடாது என்ற விதிமுறை நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது.
-
வாக்காளர்கள் பெயர் நீக்கம் தொடர்பான புகார்:பார்லி. தேர்தல் முடிந்த பின் நடவடிக்கை எடுக்கப்படும் தமிழ்நாடு தேர்தல் ஆணையம் தகவல்
02 May 2024சென்னை:வாக்காளர்கள் பெயர் நீக்கம் தொடர்பான புகார்களை பாராளுமன்ற தேர்தல் முடிந்த பிறகு ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழ்நாடு தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளத
-
ஏப்ரலில் 80.87 லட்சம் பேர் மெட்ரோ ரயிலில் பயணம்
02 May 2024சென்னை : சென்னையில் மெட்ரோ ரயில்களில் ஏப்ரல் மாதத்தில் 80,87,712 பயணிகள் பயணம் செய்துள்ளதாக மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.
-
தமிழ் சினிமாவின் பிரபல பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
02 May 2024சென்னை : தமிழ் சினிமாவின் பிரபல பின்னணி பாடகி உமா ரமணன், 69 உடல் நலக்குறைவால் சென்னையில் காலமானார்.
-
பொதுத்தேர்வில் ஆப்சென்ட் ஆன 10, 12-ம் வகுப்பு மாணவர்கள் மீண்டும் தேர்வு எழுத வாய்ப்பு
02 May 2024சென்னை : 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் ஆப்சென்ட் ஆன மாணவர்களை கண்டறிந்து அவர்களுக்கு துணை தேர்வு எழுத நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை சார்ப
-
நிதி உதவி வழங்காமல் மாநில அரசுகளை வஞ்சித்து வருகிறது : மத்திய அரசு மீது மம்தா குற்றச்சாட்டு
02 May 2024கொல்கத்தா : நிதி உதவி வழங்காமல் மாநில அரசுகளை மத்திய அரசு வஞ்சித்து வருகிறது என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி குற்றஞ்சாட்டியுள்ளார்.
-
தஞ்சை பெரிய கோயில் விவகாரத்தில் அவதூறு பரப்புவேர் மீது நடவடிக்கை : தமிழக அரசு எச்சரிக்கை
02 May 2024சென்னை : தஞ்சை பெருவுடையார் திருக்கோயிலை சிதைக்கும் நோக்கில் இந்து சமய அறநிலையத் துறை செயல்பட்டு வருவதாக தவறான செய்தி வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.
-
கொரோனா தடுப்பூசி சான்றிதழ்களில் இருந்து பிரதமர் மோடி படம் நீக்கம் : மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் விளக்கம்
02 May 2024புதுடெல்லி : கொரோனா தடுப்பூசி சான்றிதழ்களில் இருந்து பிரதமர் மோடி புகைப்படம் நீக்கப்பட்டது குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அளித்துள்ளது.
-
நிலவின் பள்ளங்களில் உறைந்த பனிக்கட்டிகள் : இஸ்ரோவின் ஆய்வில் கண்டுபிடிப்பு
02 May 2024சென்னை : நிலவின் பள்ளங்களில் நீர் பனிக்கட்டிகள் உறைந்த நிலையில் இருப்பது இஸ்ரோவின் ஆய்வில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
-
உலகின் பெரும் பணக்காரர்களின் பட்டியலில் இணையும் சுந்தர் பிச்சை
02 May 2024வாஷிங்டன் : உலகின் பெரும் பணக்காரர்களின் பட்டியலில் சுந்தர்பிச்சை இணைந்துள்ளார்.