முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழகத்தில் அடுத்த 3 நாட்கள் மிதமான மழைக்கு வாய்ப்பு

வியாழக்கிழமை, 7 அக்டோபர் 2021      தமிழகம்
Image Unavailable

தமிழகத்தில் மேலும் 3 நாட்கள் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் கூறியதாவது.,

 

வெப்ப சலனம் காரணமாக தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு மிதமான மழை பெய்யக்கூடும். இன்று வட மாவட்ட மற்றும் டெல்டா மாவட்டங்களில் அநேக இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். 9-ந் தேதி வட மாவட்டங்களில் லேசான மழை பெய்யும். 10, 11 ஆகிய தேதிகளில் உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும். சென்னையை பொறுத்தவரை வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது. இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து