முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மீனவர்களை சுட்டுக்கொன்ற பணியாளர்கள் இத்தாலி பயணம்

ஞாயிற்றுக்கிழமை, 23 டிசம்பர் 2012      இந்தியா
Image Unavailable

 

கொச்சி, டிச.23 - இந்திய மீனவர்களை சுட்டுக் கொன்ற வழக்கில் கைதான இத்தாலி நாட்டு கப்பல் பணியாளர்கள் இருவர் நேற்று கொச்சி விமான நிலையத்திலிருந்து இத்தாலிக்கு புறப்பட்டுச் சென்றனர். இவர்கள் இருவரும் நீதிமன்ற உத்தரவுப்படி கிறிஸ்துமஸ் கொண்டாடி விட்டு இரு வாரங்களுக்குள் மீண்டும் இந்தியாவுக்கு திரும்ப வேண்டும்.          

   கடலில் மீன் பிடித்துக்கொண்டிருந்தபோது,  மாசிமில்லியனோ லடோரே, சல்வடோரே கிரோன் ஆகிய இருவரும் துப்பாக்கியால் சுட்டதில் தமிழக மீனவர்கள் இருவர் உயிரிழந்தனர்.

     நீதிமன்ற உத்தரவுப்படி அவர்கள் இருவரும் தங்களது பாஸ்போர்ட்களை கொல்லம் கூடுதல் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்திலிருந்து பெற்றுக்கொண்டு இத்தாலி புறப்பட்டுச் சென்றனர். ஜனவரி மாதம் 10-ம் தேதி அவர்கள் இந்தியா திரும்ப வேண்டும். கேரள உயர்நீதிமன்றம் கூறியபடி அவர்கள் 6 கோடி ரூபாய்க்கான வங்கி உத்தரவாதம் வழங்கியுள்ளனர்.  

கடந்த பிப்ரவரி மாதம் 15-ம் தேதி ஆலப்புழை கடலில் தமிழக மீனவர்களான ராஜேஷ் பிங்கி, ஜெலஸ்டின் ஆகியோர் மீன் பிடித்துகொண்டிருந்தனர். இவர்களை இத்தாலிய கப்பல் பணியாளர்கள் சுட்டுக்கொன்றனர்.  இதுதொடர்பாக அவர்கள் பிப்ரவரி 19-ம் தேதி கைது செய்யப்பட்டனர்.

இவர்கள் கிறிஸ்துமஸ் கொண்டாட இத்தாலிக்கு அனுப்புமாறு கேட்டுக்கொள்வதற்காக  இத்தாலி நாட்டு பாதுகாப்புத் துறை  அமைச்சர் இங்கு வந்திருந்தார். அவருடன் விடியோ கான்பரன்சிங் மூலம் இந்திய ஜனாதிபதி உரையாடினார்.

இத்தாலி நாட்டவரைஇத்தாலிக்கு அனுப்பக் கூடாது என்று கேரள மார்க்சிஸ்ட் கட்சித் தலைவர் அச்சுதானந்தன்  எதிர்ப்பு ஙீதெரிவித்திருந்தார். இது விசாரணையை பாதிக்கும் என்று கேரள அரசும் ஆட்சேபனை தெரிவித்திருந்தது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்