முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

லால்சிங் சத்தா விமர்சனம்

திங்கட்கிழமை, 15 ஆகஸ்ட் 2022      சினிமா
Lalsingh-Chadha-Review 2022

Source: provided

அமீர்கான், கரீனா கபூர் நாக சைதன்யா ஆகியோர் நடிப்பில் அத்வைத் சந்தன் இயக்கியுள்ள படம் லால் சிங் சத்தா. 1994-ஆம் ஆண்டு வெளியாகி வெற்றியடைந்த Forrest Gump என்ற ஆங்கில படத்தின் உரிமையை பெற்று, இந்திய மொழிகளுக்கு தகுந்தவாறு சிறு மாற்றங்களுடன் மறு உருவாக்கம் செய்துள்ளனர். படத்தின் தொடக்கத்தில் அமீர்கான், ரயில் பயணத்தில் சக பயணிகளிடம் தன் கதையை சொல்ல தொடங்குகிறார். அவரின் சிறு வயது முதல், அவரது மகன் பள்ளி செல்வது வரை நடக்கும் சம்பவங்கள் அடுத்தடுத்த காட்சிகளாக வருகின்றன. கதை, எந்த ஒரு விஷயத்தையும் மெதுவாக புரிந்துகொள்ளும் திறமை கொண்ட லால் சிங்கிற்கு சிறு வயதில் நடக்க முடியவில்லை. ஆனால் மருத்துவர் அவரின் பிரச்னை காலில் இல்லை, எண்ணத்தில் உள்ளது என்கிறார். அந்த சிறுவன் காதலில் விழுகிறார். ராணுவத்தில் சேர்ந்து சாதனை செய்கிறார். மிகப்பெரிய தொழிலதிபராகிறார். அது எப்படி சாத்தியம் என்பதை நிதானமான திரைக்கதை மூலம் சொல்லியுள்ளார் இயக்குநர் அத்வைத் சந்தன். தனது ஒவ்வொரு அசைவிலும் ஒரு உன்னதமான நடிப்பை வழங்கி இருக்கும் அமீர்கானுக்கு நிச்சயம் பல விருதுகள் காத்து இருக்கின்றன. ரூபாவாக வரும் கரீனா கபூர் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார். சத்யஜித் பாண்டேவின் ஒளிப்பதிவும் தனுஷ் டிக்கின் இசைக்கோர்ப்பும் அருமை. மொத்தத்தில் லால் சிங் சத்தா ஒரு அழகான படம்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து