எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
துபாய் : உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் நடுவர்களாக செயல்பட உள்ளவர்களை ஐசிசி அறிவித்துள்ளது.
ஓவல் மைதானத்தில்...
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டு ஜூன் மாதம் 7ம் தேதி முதல் 11ம் தேதி வரை இங்கிலாந்தின் லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெறுகிறது. இந்த இறுதிப்போட்டியில் இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் மோத உள்ளன. ஜூன் 12ம் தேதி ரிசர்வ் நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த முறை உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையை கைப்பற்ற தவறிய இந்திய அணி இந்த முறை அதை கைப்ப்ற்றும் முன்னைப்புடன் உள்ளது. கடந்த 10 வருடங்களாக எந்த ஒரு ஐசிசி கோப்பையையும் வெல்லாத இந்திய அணி அந்த நீண்ட கால சோகத்துக்கு முடிவு கட்டும் முனைப்புடன் உள்ளது.
பரிசுத்தொகை அறிவிப்பு...
அதேவேளையில் இறுதிபொபோட்டியில் இந்திய அணியை வீழ்த்தி கோப்பையை கைப்பற்ற ஆஸ்திரேலியா தீவிரமாக உள்ளது. கோப்பையை வெல்லும் அணிக்கு ரூ.13.2 கோடியும், இரண்டாம் இடம் பிடிக்கும் அணிக்கு ரூ.6.5 கோடியும் வழங்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.
கள நடுவர்களாக...
இந்நிலையில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் நடுவர்களாக செயல்பட உள்ளவர்களை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) அறிவித்துள்ளது. அதன்படி கிறிஸ் கேப்னி (நியூசிலாந்து), ரிச்சர்ட் இல்லிங்வொர்த் (இங்கிலாந்து) ஆகியோர் கள நடுவர்களாவும், ரிச்சர் கெட்டில்பொரோக் (இங்கிலாந்து) டிவி நடுவராகவும், குமார் தர்மசேனா (இலங்கை) நான்காவது நடுவராகவும், ரிச்சி ரிச்சர்ட்சன் (வெஸ்ட் இண்டீஸ்) போட்டி ரெப்ரீயாகவும் செயல்பட உள்ளதாக ஐசிசி அறிவித்துள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்3 months 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்3 months 3 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.4 months 2 weeks ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 15-01-2025
15 Jan 2025