Idhayam Matrimony

ஆற்றில் திடீரென படகு கவிழ்ந்ததில் நூலிழையில் உயிர் தப்பிய அமைச்சர்

சனிக்கிழமை, 10 ஜூன் 2023      இந்தியா
Telangana 2023 06 10

Source: provided

திருப்பதி : தெலுங்கானாவில் ஆற்றில் திடீரென படகு கவிழ்ந்த விபத்தில் அமைச்சர் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார்.

தெலுங்கானா மாநிலம் உருவாகி 10 ஆண்டுகள் ஆவதையொட்டி மாநிலம் முழுவதும் கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர். ஐதராபாத் அருகே உள்ள கரீம் நகரில் உள்ள ஆசிஃப் நகரில் தெலுங்கானா மாநில ஆண்டுவிழா கொண்டாட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்தனர்.

இந்த பகுதிக்கு அங்குள்ள ஆற்றில் படகில் தான் செல்ல வேண்டும். இதில் கலந்து கொள்வதற்காக அந்த மாநில பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை மற்றும் நுகர்பொருள் வழங்கல் துறை அமைச்சர் காங்குலா கமலாகர் படகில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது, படகு திடீரென கவிழ்ந்தது. நிலைதடுமாறிய அமைச்சர் தண்ணீரில் விழுந்தார். கரையில் இருந்த போலீசார் மற்றும் அரசியல் கட்சியினர் இதனை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக போலீசார் தண்ணீரில் இறங்கி அமைச்சர் மற்றும் அவருடன் இருந்த நிர்வாகிகளை லாவகமாக காப்பாற்றினர். படகு கவிழ்ந்த விபத்தில் அமைச்சர் தண்ணீரில் நிலை தடுமாறி நூலிலையில் தப்பிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. படகு கவிழ்ந்து அமைச்சர் தண்ணீரில் விழும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து