முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இம்ரான் கானுடன் இணைந்து ஆட்சி அமைப்பாரா ஷெரீப்?

ஞாயிற்றுக்கிழமை, 12 மே 2013      உலகம்
Image Unavailable

 

இஸ்லாமாபாத், மே. 13 - பாகிஸ்தானில் புதிய ஆட்சி அமையவுள்ளது. நவாஸ் ஷெரீப் கட்சி அங்கு தனிப் பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. ஆனால் இதுவரை பெரும்பான்மை பலம் கிடைக்கவில்லை. இருப்பினும் 2 வது இடத்தைப் பிடித்துள்ள இம்ரான் கான் கட்சியுடன் இணைந்து ஷெரீப் கூட்டணி ஆட்சி அமைக்கலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. 

பாகிஸ்தான் அரசியல் வரலாற்றில் இதுவரை பாகிஸ்தான் மக்கள் கட்சி மற்றும் பாகிஸ்தான் முஸ்லீம் லீக் கட்சி ஆகியவற்றில் ஏதாவது ஒன்று ஆட்சியில் இருக்கும். இன்னொன்று எதிர்க்கட்சியாக இருக்கும். ஆனால் முதல் முறையாக இதை உடைத்து 2 வது இடத்தைப் பிடித்துள்ளார் இம்ரான் கான். இது பெரும் சாதனையாக பார்க்கப்படுகிறது. இது குறித்து இம்ரான் கான் கூறுகையில், 

பாகிஸ்தான் முஸ்லீம் லீக் கட்சி வெற்றி பெற்றுள்ளதை நான் ஒப்புக் கொள்கிறேன். நவாஸ் ஷெரீப்பை பாராட்டுகிறேன் என்றார் அவர். தற்போது ஷெரீப் கட்சிக்கு 119 இடங்கள் வரை கிடைக்கலாம் என்று தெரிகிறது. இம்ரான் கட்சிக்கு 35 இடங்கள் வரை கிடைக்கலாம். 3 வது இடத்தில் பாகிஸ்தான் மக்கள் கட்சியும் உள்ளன. ஆட்சியமைக்க 137 இடங்கள் தேவை. எனவே ஷெரீப் கட்சிக்கு இன்னும் சிலரின் ஆதரவு தேவைப்படுகிறது. அதை இம்ரான் கானிடமிருந்து ஷெரீப் பெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி நடந்தால் துணைப் பிரதமர் பதவி போன்ற உயர்ந்த பதவி இம்ரானுக்குக் கிடைக்கக் கூடும் என்றும் தெரிகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்