முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தங்கம் விலை ஒரே நாளில் பவுனுக்கு 344 அதிகரிப்பு

செவ்வாய்க்கிழமை, 11 ஜூன் 2013      தமிழகம்
Image Unavailable

சென்னை, ஜூன். 12  - நேற்று ஒரே நாளில் தங்கம் பவுனுக்கு ரூ. 344 உயர்ந்து பவுன் விலை ரூ. 21 ஆயிரத்தை தாண்டியது. இறக்குமதி வரியை அதிகரித்ததில் இருந்து தங்கம் விலை உயர்ந்து கொண்டே வருகிறது. கடந்த 8 ம் தேதி தங்கம் ஒரு பவுன் 20,712 ஆக இருந்தது. நேற்று முன்தினம் பவுனுக்கு ரூ. 152 உயர்ந்தது. நேற்று மட்டும் ஒரே நாளில் ரூ. 344 அதிகரித்து ஒரு பவுன் ரூ. 21,208 ஆனது. சில நாட்களாக 20 ஆயிரமாக இருந்த பவுனின் விலை தற்போது 21 ஆயிரத்தை தாண்டியுள்ளது. அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு வீழ்ச்சியடைந்ததை தொடர்ந்து இறக்குமதி தங்கத்தின் விலை உயர்ந்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்