முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உத்தரகாண்ட்டில் வெள்ளம்: மேலும் 40 சடலங்கள் மீட்பு

வெள்ளிக்கிழமை, 21 ஜூன் 2013      இந்தியா
Image Unavailable

 

டேராடூன்,ஜூன்.22 - உத்தரகாண்ட் மாநில மலைப்பகுதிகளில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவில் சிக்கி பலியானவர்களின்  எண்ணிக்கை 200- ஐ தாண்டியது என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. நேற்று மட்டும் ஹரித்வாரில் 40 பேர் உடல்கள் எடுக்கப்பட்டன. மீட்புப்பணியில் 40 ஹெலிகாப்டர்கள் ஈடுபட்டுள்ளன. 

கேதார்நாத்,பத்ரநாத்தில் சிக்கியுள்ள 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களை மீட்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. மீட்புபணியில் முதலில் 20 ஹெலிகாப்டர்கள் ஈடுபட்டிருந்தன. தற்போது 40 ஹெலிகாப்டர்கள் மீட்புப்பணியில் ஈடுபட்டுள்ளன. கனமழையால் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை அதிர்ச்சி அளிக்கக்கூடிய அளவில் அதிகரித்து வருகிறது என்று மாநில முதன்மை செயலாளர் ராகேஷ் ஷர்மா நேற்று டேராடூனில் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் தெரிவித்தார். ஹரித்வாரில் மட்டும் 40 பேர் உடல்கள் கண்டு எடுக்கப்பட்டன என்று அதிரடிப்படை தலைவர் ராஜீவ் ஸ்வரூப் தெரிவித்தார். கேதர்நாத் மற்றும் பத்ரிநாத்தில் மட்டும் 10 ஆயிரம் பக்தர்கள் சிக்கியுள்ளனர். அவர்களை மீட்கும் பணியில் ராணுவத்தினர் கவனம் செலுத்தி வருகின்றனர். கடந்த ஆயிரக்கணக்கான ஆண்டில் இந்த அளவுக்கு இயற்கை பேரழிவு ஏற்பட்டதில்லை என்று மாநில விவசாயத்துறை அமைச்சர் ஹராக் சிங் ரவாத் தெரிவித்துள்ளார். கனமழைக்கு கேதார்நாத் பகுதிதான் அதிக அளவு பாதிக்கப்பட்டுள்ளது. இங்கு ஏற்பட்டுள்ள உள்கட்டமைப்பு சேதங்களை சரிசெய்ய இன்னும் குறைந்தது 5 ஆண்டுகளாகும் என்றும் அமைச்சர் ரவாத் கூறினார் கேதார்நாத் பகுதிக்கு ரவாத் சென்று அங்கு சுமார் 5 மணி நேரம் தங்கி இருந்தார். அப்போது பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளை சுற்றிப்பார்த்தார். அப்போது அதிர்ச்சி தரக்கூடிய அளவுக்கு இயற்கை பேரழிவு ஏற்பட்டிருப்பது தெரியவந்தது. கோயிலை சுற்றிலும் ஏராளமான கட்டிடங்கள் இடிந்துவிழுந்தோடு பல கட்டிடங்கள் வெள்ளத்தில் அடித்துசெல்லப்பட்டுவிட்டன என்றும் அமைச்சர் ரவாத் மேலும் கூறினார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்