எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புதுடெல்லி : மொரிஷியஸ் மற்றும் இலங்கையில் யு.பி.ஐ. பரிவர்த்தனை சேவைகள் இன்று அறிமுகப்படுத்தப்படுகின்றன. இந்நிகழ்வில் காணொலி மூலம் பிரதமர் மோடி கலந்து கொள்கிறார்.
யு.பி.ஐ. எனப்படும் டிஜிட்டல் பண பரிவர்த்தனையானது சாலையோர கடைகளில் இருந்து மால் வரை அனைத்து இடங்களிலும் உள்ளது. ஜிபே, போன் பே போன்ற செயலிகளில் யு.பி.ஐ. பயன்படுத்தி நாம் இந்தியாவில் எங்கு வேண்டுமானாலும் பணம் செலுத்தலாம் மற்றும் பணத்தை பெறலாம்.
இந்தியாவின் யு.பி.ஐ. சேவைகள் உலகிற்கே முன்மாதிரியாக இருந்து வருகிறது. பல்வேறு நாடுகளும் யு.பி.ஐ. மூலம் செய்யப்படும் பரிவர்த்தனைகளை ஏற்க தொடங்கியுள்ளன.
இந்நிலையில், யு.பி.ஐ. மூலம் பணம் செலுத்தும் நாடுகளின் பட்டியலில் இலங்கையும், மொரிஷியசும் இணைந்துள்ளது. இதன்படி இந்தியாவின் ஒருங்கிணைந்த கட்டண இடைமுகம் (யு.பி.ஐ.) பரிவர்த்தனை சேவைகள் இலங்கை மற்றும் மொரிஷியஸில் இன்று நடைபெறும் விழாவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
காணொலி காட்சியின் வாயிலாக நடைபெற உள்ள இந்த நிகழ்வில் பிரதமர் மோடி, மொரிஷியஸ் பிரதமர் பிரவிந்த் ஜக்நாத் மற்றும் இலங்கை அதிபர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் கலந்து கொள்ள உள்ளதாக மத்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்3 months 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்3 months 3 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.4 months 2 weeks ago |