முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ராஜ்தாக்கரே - பார்கருக்கு நீதிமன்றம் பிடிவாரண்ட்

ஞாயிற்றுக்கிழமை, 28 ஜூலை 2013      இந்தியா
Image Unavailable

 

புது டெல்லி, ஜூலை. 28 - பீகார் மக்கள் பற்றி அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் மகராஷ்டிர நவநிர்மாண் சேனை கட்சி தலைவர் ராஜ்தாக்கரே மற்றும் அக்கட்சி செய்தி தொடர்பாளர் கிரீஷ் பார்கர் ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜராகாததால் ஜாமீனில் வெளி வர முடியாத பிடிவாரண்ட் பிறப்பித்து டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கூடுதல் தலைமை பெருநகர மேஜிஸ்திரேட் தேவேந்திரகுமார் சர்மா வரும் ஆகஸ்ட் 24 ம் தேதி நீதிமன்றத்தில் அவர்களை ஆஜர்படுத்துமாறு போலீசாருக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார். வழக்கு விசாரணையில் ஆஜராவதில் இருந்து விலக்கு கோரி அவர்கள் தாக்கல் செய்திருந்த மனுவை நீதிமன்றம் ஏற்கனவே தள்ளுபடி செய்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

பாட்னா வழக்கறிஞர்கள் சங்க உறுப்பினர் பிரேம்சந்திர ஜெய்ஸ்வால், பீகார் மக்கள் பற்றி அவதூறாகவும், அச்சுறுத்தும் வகையிலும் பேசிய ராஜ்தாக்கரே, பார்கர் ஆகியோர் மீது நடவடிக்கை கோரி பாட்னா நீதிமன்றத்தில் கடந்த  2008 ல் மனு தாக்கல் செய்திருந்தார். பின்னர் வழக்கு டெல்லி நீதிமன்றத்துக்கு கடந்த 2010 ல் மாற்றப்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்