எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புது டெல்லி, புது தில்லியில் நேற்று நடைபெற்ற நிதி ஆயோக் கூட்டத்தில் பீகார் முதல்வர் நிதிஷ் குமார் பங்கேற்க வில்லை. அதற்கான காரணங்கள் குறித்து தகவல் எதுவும் வெளியாகவில்லை.
டெல்லி பிரகதி மைதானத்தில் நேற்று நடைபெற்ற நிதி ஆயோக்கின் 9-வது நிர்வாகக் குழுக் கூட்டம் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாநிலத்தில் சார்பில் துணை முதல்வர்கள் சாம்ராட் சௌத்ரி மற்றும் விஜய் குமார் சின்ஹா ஆகியோர் கலந்துகொள்வார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கியமான இந்த கூட்டத்தில் நிதீஷ் குமார் கலந்துகொள்ளாததற்கான சரியான காரணத்தை உடனடியாக வெளியிடவில்லை. நிதி ஆயோக் கூட்டத்தில் முதல்வர் கலந்து கொள்ளாதது இது முதல் முறையல்ல. முன்னதாக நடைபெற்ற நிதி ஆயோக் கூட்டத்தில் பீகார் முதல்வர் கலந்துகொள்ளவில்லை, பீகார் பிரநிதியாக அப்போதைய துணை முதல்வர் கலந்துகொண்டார்.
இந்த ஆண்டுக்கான கூட்டத்தில் இரண்டு துணை முதல்வர்களும் கூட்டத்தில் கலந்து கொள்வார்கள் என ஜேடியு செய்தித் தொடர்பாளர் நீரஜ் குமார் பிடிஐயிடம் தெரிவித்திருந்தார். மேலும், பீகாரைச் சேர்ந்த 4 மத்திய அமைச்சர்களும் நிதி ஆயோக்கில் உறுப்பினர்களாக பங்கேற்பார்கள் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
வரும் 2047ஆம் ஆண்டுக்குள் இந்தியாவை வல்லரசு நாடாக மாற்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, நாட்டின் மிக உயரிய கொள்கை உக்திகளை வகுக்க நிதி ஆயோக் அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. நிதி ஆயோக் நிர்வாகக் குழுவில் அனைத்து மாநில முதல்வர்கள், யூனியன் பிரதேச துணை நிலை ஆளுநர்கள் மற்றும் மத்திய அமைச்சா்கள் இடம் பெற்றுள்ளனர். பிரதமர் மோடி நிதி ஆயோக்கின் தலைவராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்3 months 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்3 months 3 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.4 months 2 weeks ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 15-01-2025
15 Jan 2025