எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
33-வது ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடந்து வருகிறது. இதில் 206 நாடுகளைச் சேர்ந்த 10,714 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இதில் 8-வது நாளான நேற்று நடைபெற்ற ஆக்கி போட்டியில் ஏற்கனவே காலிறுதி வாய்ப்பை உறுதி செய்த இந்திய அணி தனது 5-வது மற்றும் கடைசி லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவுடன் மோதியது. இதில் தொடக்கம் முதலே சிறப்பாக விளையாடிய இந்திய அணி முதல் பாதியிலேயே 2-1 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது.
இதனையடுத்து நடைபெற்ற பிற்பாதி ஆட்டத்தில் இரு அணிகளும் தலா 1 கோல் அடித்தன. இதனால் இந்திய அணி 3-2 என்ற கோல் கணக்கில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி லீக் சுற்றை வெற்றியுடன் நிறைவு செய்துள்ளது. இந்திய அணி தரப்பில் ஹர்மன்ப்ரீத் சிங் 2 கோல்களும், அபிஷேக் 1 கோலும் அடித்தனர். ஆஸ்திரேலியா தரப்பில் தாமஸ் கிரெய்க் மற்றும் பிளேக் கவர்ஸ் தலா 1 கோல் அடித்தனர்.
வில்வித்தை: இந்திய இணை தோல்வி
33-வது ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடந்து வருகிறது. இதில் 206 நாடுகளைச் சேர்ந்த 10,714 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இதில் வில்வித்தை கலப்பு அணிகள் அரையிறுதி போட்டியில் இந்திய இணையான தீரஜ் பொம்மதேவரா- அங்கிதா பகத் ஜோடி, தென் கொரியாவின் ஷியோன் லிம் - வூஜின் கிம் இணையுடன் மோதியது. இதில் ஆதிக்கம் செலுத்திய தென் கொரிய இணை 6-2 என்ற புள்ளி கணக்கில் இந்திய ஜோடியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது. அரையிறுதியில் தோல்வியடைந்த தீரஜ் பொம்மதேவரா- அங்கிதா பகத் ஜோடி அடுத்த வெண்கல பதக்கத்துக்கான போட்டியில் விளையாட உள்ளது.
இறுதிக்கு மனு பாக்கர் தகுதி
33-வது ஒலிம்பிக் போட்டியின் 8-வது நாளான நேற்று நடைபெற்ற பெண்களுக்கான துப்பாக்கி சுடுதல் 25 மீட்டர் பிஸ்டல் தகுதி சுற்று போட்டியில் இந்திய வீராங்கனைகளான மனு பாக்கர் மற்றும் இஷா சிங் கலந்து கொண்டனர். இதில் நடப்பு ஒலிம்பிக்கில் இந்தியாவுக்காக 2 வெண்கல பதக்கம் வென்று கொடுத்து அசத்திய மனு பாக்கர் இன்றும் சிறப்பாக செயல்பட்டார். முதல் 8 இடங்களை பிடிக்கும் வீராங்கனைகள் மட்டுமே இறுதிப்போட்டிக்கு தகுதி பெற முடியும் என்ற சூழலில் மனு பாக்கர் 2-வது இடம் பிடித்து அசத்தினார். இதன் மூலம் இறுதிப்போட்டிக்கு முன்னேறிய அவர் 3-வது பதக்கத்தை சுடுவார் என்ற எதிர்பார்ப்பு காணப்படுகிறது. அதே வேளை மற்றொரு இந்திய வீராங்கனையான இஷா சிங் 18-வது இடம்பிடித்து ஏமாற்றம் அளித்தார்.
ஜூடோ: துலிகா தோல்வி
நேற்று நடைபெற்ற ஜூடோ பெண்கள் (78 கிலோவுக்கு மேல் எடைபிரிவு) முதல் சுற்று போட்டியில் இந்திய வீராங்கனை துலிகா மான் , கியூபா வீராங்கனை ஐடலிஸ் ஓர்டிஸ் உடன் மோதினார். இதில் வெறும் 28 நிமிடங்களிலேயே துலிகா மான் 0-10 என்ற கணக்கில் தோல்வியடைந்து ஏமாற்றம் அளித்தார்.
இகா ஸ்வியாடெக் தோல்வி
33-வது ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடந்து வருகிறது. இதில் 206 நாடுகளைச் சேர்ந்த 10,714 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இதில் டென்னிஸ் பெண்கள் ஒற்றையர் பிரிவில் நடைபெற்ற அரையிறுதி ஆட்டம் ஒன்றில் 'நம்பர் ஒன்' வீராங்கனை இகா ஸ்வியாடெக் (போலந்து), சீனாவின் ஜெங் கின்வென்னுடன் மோதினார்.
இந்த போட்டியில் ஸ்வியாடெக் 2-6, 5-7 என்ற நேர் செட் கணக்கில் ஜெங் கின்வென்னிடம் அதிர்ச்சி தோல்வி அடைந்தார். இந்த நிலையில் வெண்கலப் பதக்கத்துக்காக இன்று நடைபெற உள்ள ஆட்டத்தில் இகா ஸ்வியாடெக், சுலோவேகியா வீராங்கனை அன்னா கரோலினா உடன் மோதுகிறார்.
குசாலேக்கு ரூ.1 கோடி பரிசு
துப்பாக்கி சுடுதலில் ஆண்களுக்கான 50 மீட்டர் ரைபிள் (3 நிலை) இறுதிச்சுற்றில் இந்திய வீரர் ஸ்வப்னில் குசாலே வெண்கலம் வென்று அசத்தினார். ஒலிம்பிக் வரலாற்றில் 50 மீட்டர் துப்பாக்கி சுடுதலில் முதல் பதக்கம் பெற்ற இந்திய வீரர் என்ற சாதனையையும் அவர் படைத்துள்ளார். பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவுக்கு இதுவரை 3 பதக்கங்கள் கிடைத்துள்ளன. 3 பதக்கங்களும் துப்பாக்கி சுடுதலில் கிடைத்துள்ளது. ஒலிம்பிக் வரலாற்றில் துப்பாக்கி சுடுதலில் இந்தியா இரண்டுக்கும் மேற்பட்ட பதக்கங்களை வெல்வது இதுவே முதல் முறை. இந்த பெருமையை ஸ்வப்னில் குசாலே, மனு பாக்கர் மற்றும் சர்ப்ஜோத் சிங் ஆகியோருடன் இணைந்து பெற்றுள்ளார்.
இந்த நிலையில் துப்பாக்கி சுடுதலில் வெண்கலப் பதக்கம் வென்ற ஸ்வப்னில் குசாலேக்கு மராட்டிய முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே ரூ.1 கோடி பரிசுத்தொகை அறிவித்துள்ளார். முன்னதாக ஸ்வப்னில் குசாலே மற்றும் அவரது பயிற்சியாளர்கள் திபாலி தேஷ்பாண்டே மற்றும் விஸ்வஜித் ஷிண்டே ஆகியோருடன் முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே காணொலி காட்சி வாயிலாக பேசினார். அப்போது ஏக்நாத் ஷிண்டே கூறும்போது, "இந்த பதக்கம் மராட்டியத்திற்கு பெருமையையும் மகிழ்ச்சியையும் தந்துள்ளது. ஸ்வப்னில் 0.1 புள்ளி வித்தியாசத்தில் வெள்ளிப் பதக்கத்தைத் தவறவிட்டார். இருப்பினும், அவரது வெண்கலப் பதக்கம் ஒவ்வொரு மராட்டியருக்கும் புன்னகையை வரவழைத்துள்ளது. 72 ஆண்டுகளுக்கு பிறகு மராட்டியம் தனிநபர் பிரிவில் பதக்கம் பெற்றுள்ளது. ஸ்வப்னிலுக்கு ரூ.1 கோடி பரிசு வழங்கப்படும்" என்று கூறினார்.
ஜோகோவிச் அரையிறுதிக்கு தகுதி
பிரான்ஸ் தலைநகர் பாரீசில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் மொத்தம் 200-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த பல ஆயிரக்கணக்கான வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர். இந்நிலையில், டென்னிஸ் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் செர்பிய வீரர் நோவக் ஜோகோவிச், கிரீஸ் வீரர் சிட்சிபாசுடன் மோதினார். இதில் ஜோகோவிச் 6-3, 7-6 (7-3) என்ற செட்களில் வென்று அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார். அரையிறுதியில் ஜோகோவிச் இத்தாலி வீரர் லாரன்சோ முசெட்டியுடன் மோதுகிறார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்3 months 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்3 months 3 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.4 months 2 weeks ago |