எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை : மீனவர்கள் நலனை முன்வைத்தும், மீனவர்களை பாதுகாப்பதில் அக்கறை இல்லாமல் இருந்து வரும் மத்திய ,மாநில அரசுகளை கண்டித்தும் 6-ம் தேதி ராமேசுவரத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அ.தி.மு.க. பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக அ.தி.மு.க. பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி விடுத்துள்ள அறிக்கையில்,
தமிழகத்தின் ஜீவாதாரப் பிரச்சனையாக இருந்தாலும், மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தாக்கப்படுவது உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளாக இருந்தாலும், அவற்றைத் தீர்த்து வைப்பதில் மத்திய அரசும், மாநில அரசும் பாராமுகமாக இருந்து வருவது மிகுந்த வேதனைக்குரிய விஷயமாகும்.
ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்தைச் சேர்ந்த மீனவர்கள் கடந்த 1-ம் தேதி அன்று அதிகாலை நெடுந்தீவு அருகே கடற்பரப்பில் மீன்பிடித்து கொண்டிருந்தபோது, அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக தமிழக மீனவர்களைக் கைது செய்ய முயன்றபோது, ராமேசுவரத்தை சேர்ந்தவருக்கு சொந்தமான விசைப்படகின் மீது இலங்கை கடற்படையினரின் ரோந்துப்படகு மோதியதில் விசைப்படகு நடுக்கடலில் மூழ்கி விட்டதாகவும், இப்படகில் இருந்த 4 மீனவர்கள் மாயமான நிலையில், மலைச்சாமி என்பவரின் உடல் தற்போது சடலமாக மீட்கப்பட்டுள்ளதாகவும், மூக்கையா, முத்து முனியாண்டி ஆகிய மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், ராமச்சந்திரன் என்பவரை கடற்படையினர் தேடி வருவதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
இதேபோல், கடந்த ஜூலை 27 அன்று இலங்கை கடற்படையினரால் ராமேசுவரத்தைச் சேர்ந்த 9 மீனவர்கள் கைது செய்யப்பட்டு, அவர்களின் இரண்டு விசைப் படகுகள் சிறை பிடிக்கப்பட்டுள்ளன. இலங்கை கடற்படையினர் இதுபோன்ற அராஜகச் செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.
அவர்களின் இத்தகைய செயல்களை தடுத்து நிறுத்திடும் வகையில் மத்திய அரசும், தி.மு.க. அரசும் எவ்வித அக்கறையும் காட்டாமல் மெத்தனமாக இருந்து வருவது, மீனவப் பெருங்குடி மக்களுக்கு செய்து வரும் மாபெரும் துரோகமாகும்.
இந்நிலையில், மத்திய, மாநில அரசுகளை கண்டித்து ராமநாதபுரம் மாவட்ட அ.தி.மு.க. சார்பில், வரும் 6-ம் தேதி காலை 10.30 மணியளவில், ராமேசுவரம் பேருந்து நிலையம் எதிரில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
இந்தக் கண்டன ஆர்ப்பாட்டம், சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவரும், முன்னாள் அமைச்சருமான , ஆர்.பி.உதயகுமார் தலைமையிலும்; ராமநாதபுரம் மாவட்ட செயலாளர் முனியசாமி முன்னிலையிலும் நடைபெறும்.
இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில், மீனவர்கள், வியாபாரிகள், பல்வேறு தரப்பட்ட தொழிலாளர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் அனைவரும் பெருந்திரளான அளவில் கலந்து கொள்ளுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்3 months 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்3 months 3 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.4 months 2 weeks ago |