Idhayam Matrimony

இலங்கை கடற்படை கப்பல் மோதி உயிரிழந்த தமிழக மீனவர் உடல் தாயகம் கொண்டு வரப்பட்டது

சனிக்கிழமை, 3 ஆகஸ்ட் 2024      தமிழகம்
Fairman 2023 06 13

Source: provided

ராமேஸ்வரம், : இலங்கை கடற்படை ரோந்து கப்பல் மோதியதில் நடுக்கடலில் மூழ்கி உயிரிழந்த மீனவரின் உடல் நேற்று சனிக்கிழமை ராமேசுவரத்துக்கு கொண்டுவரப்பட்டது. இந்த சம்பவத்தில் உயிருடன் மீட்கப்பட்ட 2 மீனவர்களும் நேற்று மீன்பிடித் துறைமுகத்துக்கு வந்து சேர்ந்தனர்.

ராமேசுவரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து ஜூலை 31-ம் தேதி கடலுக்குச் சென்ற கார்த்திகேயன் என்பவருக்குச் சொந்தமான விசைப்படகின் மீது இலங்கை கடற்படை ரோந்து கப்பல் மோதியதில் படகிலிருந்து மூழ்கி மீனவர் மலைச்சாமி (59) உயிரிழந்தார். மீனவர் ராமச்சந்திரன் (64) கடலில் மாயமானார். முத்து முனியாண்டி(57), மூக்கையா(54) ஆகிய 2 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் மீட்கப்பட்டு, வெள்ளிக்கிழமை வழக்கு எதுவுமின்றி யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணை தூதரக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

மேலும், 2-வது நாளாக நடுக்கடலில் மாயமாகிய மீனவர் ராமச்சந்திரனை தேடும் பணிகள் கடற்படை ஹெலிகாப்டர், கடலோர காவல்படையின் ரோந்து படகுகளின் மூலம் தொடர்ந்து நடைபெற்றது. இந்நிலையில் மலைச்சாமியின் உடலை யாழ்ப்பாணம் அரசு மருத்துவமனையில் உடற்கூறாய்வு செய்யப்பட்டு யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணை தூதரகத்தில் ஒப்படைக்கப்பட்டது. அதனையடுத்து உயிருடன் மீட்கப்பட்ட 2 மீனவர்கள் மற்றும் மலைச்சாமி உடலை நேற்று முன்தினம் இரவு காங்கேசன்துறை கடற்படை முகாமில் இருந்து இலங்கை கடற்படைக்கு சொந்தமான ரோந்து படகில் அனுப்பி வைத்தனர்.

அனுப்பி வைக்கப்பட்ட மீனவர்கள் மற்றும் உடலை சர்வதேச கடல் எல்லையில் வைத்து இந்திய கடற்படைக்கு சொந்தமான ஐஎன்ஸ் பித்ரா கப்பலில் இலங்கை கடற்படையினர் ஒப்படைத்தனர். உடலை பெற்றுக்கொண்ட இந்திய கடற்படை வீரர்கள் ராமேசுவரம் மீன் பிடித் துறைமுகத்திற்கு எடுத்து வந்து நேற்று (சனிக்கிழமை) ராமேசுவரம் மீன்வளத்துறை உதவி இயக்குநர் அப்துல் காதர் ஜெயிலானியிடம் ஒப்படைத்தனர்.

அதனையடுத்து அவரது உடல் ஆம்புலன்ஸ் மூலம் எடுத்துச் செல்லப்பட்டு அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. அங்கு ராமேசுவரம் வட்டாட்சியர் செல்லப்பா மலைச்சாமியின் உடலுக்கு மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். அதேபோல் இலங்கை கடற்படையினரால் ஒப்படைக்கப்பட்ட 2 மீனவர்களும் விசாரணைக்கு பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து