எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புதுச்சேரி : புதுச்சேரியில் அரசு பள்ளிகள் வேலைநேரத்தை மீண்டும் மாற்றியமைத்து புதுவை மாநில கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.
புதுச்சேரி மாநிலத்தில் நிகழ் கல்வியாண்டு (2024-25) முதல் அனைத்து அரசுப் பள்ளிகளிலும் மத்திய இடைநிலை கல்வி வாரியப் பாடத் திட்டம் (சிபிஎஸ்இ) செயல்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில், ஜூலை 15 -ஆம் தேதி முதல் வகுப்புகள் தொடங்கும் நேரத்தை மாற்றி அமைத்து புதுச்சேரி அரசின் கல்வித் துறை உத்தரவிட்டது.
அதன்படி, ஜூலை 15-ஆம் தேதி முதல் காலை 9 மணிக்கு பள்ளிகள் தொடங்கும். காலை 9.15 வரை இறைவணக்க நிகழ்ச்சி நடைபெறும். தினமும் மொத்தம் 8 பாடவேளைகள் நடைபெறும். காலை 4 பாடவேளைகளும், பிற்பகல் 4 பாடவேளைகளும் நடைபெறும். காலையில் முதல் இரு பாடவேளைகள் முடிந்த பிறகு காலை 10.45 மணி முதல் 10.55 மணி வரையில், இடைவேளை விடப்படும்.
மதியம் உணவு இடைவேளையானது பிற்பகல் 12.25 மணி முதல் 1.30 மணி வரை இருக்கும். மதியம் இரு வகுப்புகள் முடிந்த பிறகு பிற்பகல் 2.50 மணி முதல் 3 மணி வரை இடைவேளை இருக்கும். காலையில் நடைபெறும் ஒரு பாடவேளை 45 நிமிஷங்களும், பிற்பகல் ஒரு பாடவேளை 40 நிமிஷங்களும் இயங்கும். அனைத்து அரசுப் பள்ளிகளுக்கும் பாட வகுப்புகள் நேர மாற்ற உத்தரவு பொருந்தும் எனக் குறிப்பிட்டிருந்தது.
இந்த நிலையில், புதுச்சேரியில் பள்ளிகள் தொடங்கும் நேரத்தை மீண்டும் மாற்றியமைத்து புதுச்சேரி அரசின் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. அதன்படி, ஆகஸ்ட் 7 ஆம் தேதி முதல் காலை 9 மணிக்குப் பதிலாக 9.15 மணிக்கு பள்ளிகள் தொடங்கும்.காலை 9.30 வரை இறைவணக்க நிகழ்ச்சி நடைபெறும். காலை 9.30 மணி முதல் பிற்பகல் 12.25 வரை மூன்று பாடவேளைகளும் நடைபெறும். மதியம் உணவு இடைவேளையானது 15 நிமிடங்கள் குறைக்கப்பட்டுள்ளது. மதியம் உணவு இடைவேளையானது பிற்பகல் 12.40 மணி முதல் 1 மணி வரை இருக்கும். மதியம் இரு வகுப்புகள் முடிந்த பிறகு பிற்பகல் 2.50 மணி முதல் 3 மணி வரை இடைவேளை இருக்கும். காலையில் நடைபெறும் ஒரு பாடவேளை 45 நிமிஷங்களும், பிற்பகல் ஒரு பாடவேளை 40 நிமிஷங்களும் இயங்கும். அனைத்து அரசுப் பள்ளிகளுக்கும் பாட வகுப்புகள் நேர மாற்ற உத்தரவு பொருந்தும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்3 months 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்3 months 3 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.4 months 2 weeks ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 15-01-2025
15 Jan 2025