எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புதுக்கோட்டை, புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த மீனவர்கள் இலங்கை கடற்பகுதியில் நுழைந்து எல்லை தாண்டி மீன் பிடித்ததாக 4 மீனவர்களை இலங்கை கடற்படையினர் நேற்று (ஆக. 3) கைது செய்துள்ளனர்.
ஜெகதாப்பட்டினத்திலிருந்து மீன் பிடிக்கச் சென்ற மீனவர்கள் 4 பேர் நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, அவர்களை கைது செய்துள்ள இலங்கை கடற்படையினர், அவர்களது விசைப்படகையும் பறிமுதல் செய்துள்ளனர்.
முன்னதாக ராமநாதபுரம் மற்றும் புதுக்கோட்டையைச் சேர்ந்த 21 மீனவர்கள் இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடித்ததாகக் கூறி, நடுக்கடலில் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர். இதையடுத்து, கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்திடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தினார்.
இது குறித்து கொழும்பு நகரில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள் நடவடிக்கை எடுத்த நிலையில், கடந்த 2 நாட்களுக்கு முன் 21 மீனவர்களும் இலங்கை சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டனர். அவர்களின் பயண ஆவணங்களை இந்திய தூதரக அதிகாரிகள் ஏற்பாடு செய்த பின்னர், வெள்ளிக்கிழமை இரவு ஏர் இந்தியா விமானம் மூலம் 21 மீனவர்களும் சென்னை வந்தடைந்தனர். சென்னை சர்வதேச விமான நிலையத்தில் தமிழக மீன்வளத்துறை அதிகாரிகள் மீனவர்களை வரவேற்று, அவர்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல தேவையான போக்குவரத்து வசதிகளை செய்து கொடுத்தனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்3 months 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்3 months 3 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.4 months 2 weeks ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 15-01-2025
15 Jan 2025