எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
டேராடூன், இமாசலப் பிரதேசத்தில் தொடர் கனமழை காரணமாக 77 பேர் இதுவரை உயிரிழந்ததாகவும், 190-க்கும் மேற்பட்ட சாலைகள் மூடப்பட்டு ஆகஸ்ட் 7 வரை மஞ்சள் அலர்ட் அறிவிக்கப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இமாசலில் மேகவெடிப்பின் காரணமாக ஏற்பட்ட தொடர் கனமழையால் கடந்த 4 நாள்களாக மாநிலத்தின் பெரும்பாலான இடங்களில் அதிகளவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மாநிலத்தில் தொடர்ந்து வாகனப் போக்குவரத்து நடைபெறும் சாலைகளில் மந்தி பகுதியில் 79 சாலைகளும், குலு பகுதியில் 38 சாலைகளும், சம்பாவில் 35 சாலைகளும், சிம்லாவில் 30 சாலைகளும், காங்க்ராவில் 5 மற்றும் கின்னார், லாஹால், ஸ்பிதி பகுதிகளில் தலா 2 சாலைகள் சேர்த்து மொத்தம் 191 சாலைகள் மூடப்பட்டதாக மாநில அவசர நடவடிக்கை மையம் இன்று தெரிவித்துள்ளது.
மாநிலம் முழுக்க 294 மின்சார டிரான்ஸ்ஃபார்மர்களும், 120 நீர் வழங்கும் மையங்களும் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், இமாசல் சாலைப் போக்குவரத்துக் கழகம் கொடுத்தத் தகவலின் படி மொத்தமுள்ள 3,612 வழித்தடங்களில் 82 வழித்தடங்களில் பஸ் வசதிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மிதமான மற்றும் கனமழை தொடர்ந்து மாநிலத்தின் சில பகுதிகளில் பெய்து வரும் நிலையில் நேற்றைய (ஆகஸ்ட் 2) தரவுகளின்படி, ஜோஹிந்தர் நகரில் அதிகபட்சமாக 85 மி.மீ மழை பெய்துள்ளது. கடந்த ஜூன் 27-ம் தேதி பருவமழை தொடங்கியதிலிருந்து ஆகஸ்ட் 1 வரை மழை தொடர்பான சம்பவங்களில் இதுவரை 77 பேர் உயிரிந்ததாகவும், மாநிலத்திற்கு ரூ. 655 கோடி வரை இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்3 months 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்3 months 3 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.4 months 2 weeks ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 15-01-2025
15 Jan 2025