எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பிரான்ஸ் தலைநகர் பாரீசில் 33வது ஒலிம்பிக் விளையாட்டு திருவிழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இதில் மகளிர் 25 மீட்டர் பிஸ்டல் பிரிவில் இறுதிப் போட்டி நடைபெற்றது. இந்திய வீராங்கனை மனு பாக்கர் இந்த போட்டியில் நான்காவது இடத்தை பிடித்தார். ஏற்கனவே 10 மீட்டர் ஏர் பிஸ்டல் ஒற்றையர் மற்றும் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் கலப்பு இரட்டையர் பிரிவில் மனு பாக்கர் தலா ஒரு வெண்கலப் பதக்கங்களை வென்று இருந்தார்.
தற்போது 25 மீட்டர் பிஸ்டல் பிரிவிலும் பதக்கம் வென்று சாதனை படைப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் நூலிழையில் பதக்க வாய்ப்பை தவற விட்டு நான்காவது இடத்தை பிடித்தார். அதேநேரம் ஒலிம்பிக் துப்பாக்கிச் சுடுதலில் ஒரே சீசனில் இரண்டு பதக்கங்களை வென்று தந்த முதல் வீராங்கனை என்ற சிறப்பை மனு பாக்கர் பெற்று உள்ளார்
________________________________________________________________________________
காலிறுதியில் தீபிகா தோல்வி
பிரான்ஸ் நாட்டின் பாரீஸ் நகரில் ஒலிம்பிக் போட்டிகள் நடந்து வருகின்றன. இதில், வில்வித்தை போட்டியில் மகளிர் ஒற்றையர் பிரிவின் காலிறுதி சுற்றில் இந்தியாவை சேர்ந்த தீபிகா குமாரி, தென் கொரியாவின் நாம் சுஹியோன் உடன் பலப்பரீட்சை நடத்தினார். இந்த போட்டியில், தொடக்கத்தில் இருந்து சிறப்பாக விளையாடிய தென் கொரிய வீராங்கனை 6-4 என்ற புள்ளி கணக்கில் தீபிகா குமாரியை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார். இதன் மூலம் தீபிகா குமாரி காலிறுதி சுற்றில் தோல்வியடைந்து ஏமாற்றம் அளித்தார்.
________________________________________________________________________________
அரையிறுதியில் லக்சயா சென்
33-வது ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடந்து வருகிறது. இதில் 206 நாடுகளைச் சேர்ந்த 10,500-க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இதில் பேட்மிண்டனில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நடைபெற்ற காலிறுதி போட்டியில் இந்திய வீரர் லக்சயா சென், சீன தைபே வீரர் சோ டைன் சென் உடன் மோதினார். இந்த ஆட்டத்தில் லக்சயா சென் 19-21, 21-15, 21-12 என்ற செட் கணக்கில் சோ டைன்-ஐ வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார். இதன் மூலம், ஒலிம்பிக்கில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் அரையிறுதிக்கு முன்னேறிய முதல் இந்திய வீரர் என்ற பெருமையை லக்சயா சென் பெற்றார்.
________________________________________________________________________________
வில்வித்தையில் கவுர் ஏமாற்றம்
பிரான்ஸ் தலைநகர் பாரீசில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் மொத்தம் 200-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த பல ஆயிரக்கணக்கான வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர். வில்வித்தை போட்டியில் இந்தியா, இந்தோனேசியா அணிகள் மோதின. இந்தியாவின் சார்பில் பஜன் கவுர் கலந்துகொண்டார். இதில் பஜன் கவுர் 5-5 என சமனிலை பெற்றார். இதனால் ஷூட் ஆப் முறை கடைபிடிக்கப்பட்டது. இதில் பஜன் கவுர் தோல்வி அடைந்தார். மற்றொரு வீராங்கனையான தீபிகா குமாரி காலிறுதிக்கு முன்னேறினார்.
________________________________________________________________________________
இகா ஸ்வியாடெக்குக்கு வெண்கலம்
33-வது ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடந்து வருகிறது. இதில் 206 நாடுகளைச் சேர்ந்த 10,714 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இதில் டென்னிஸ் பெண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று முன்தினம் நடைபெற்ற அரையிறுதி ஆட்டம் ஒன்றில் 'நம்பர் ஒன்' வீராங்கனை இகா ஸ்வியாடெக் (போலந்து), சீனாவின் ஜெங் கின்வென்னிடம் 2-6, 5-7 என்ற நேர் செட் கணக்கில் அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.
இந்த நிலையில் வெண்கலப் பதக்கத்துக்கான ஆட்டத்தில் இகா ஸ்வியாடெக், சுலோவேகியா வீராங்கனை அன்னா கரோலினாவுடன் மோதினார். இந்த போட்டியில் ஸ்வியாடெக் 6-2, 6-1 என்ற நேர் செட் கணக்கில் எளிதில் வென்று வெண்கலப் பதக்கத்தைக் கைப்பற்றினார். இதன்மூலம் இகா ஸ்வியாடெக் ஒலிம்பிக் டென்னிசில் பதக்கம் வென்ற முதல் போலந்து வீரர் என்ற சாதனையை படைத்தார்.
________________________________________________________________________________
இறுதிப்போட்யில் ஜோகோவிச்
33-வது ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடந்து வருகிறது. இதில் 206 நாடுகளைச் சேர்ந்த 10,714 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இதில் நடைபெற்ற டென்னிஸ் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் அரையிறுதி ஆட்டம் ஒன்றில் செர்பிய வீரர் நோவக் ஜோகோவிச், இத்தாலி வீரரான லொரன்சோ முசெட்டி உடன் பலப்பரீட்சை நடத்தினார்.
இதில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய ஜோகோவிச் 6-4 மற்றும் 6-2 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளார். இவர் இறுதிப்போட்டியில் தனது சமகால எதிரியான கார்லஸ் அல்காரஸ் உடன் மோத உள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்3 months 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்3 months 3 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.4 months 2 weeks ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 15-01-2025
15 Jan 2025