எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
வாஷிங்டன் : அதிகாரபூர்வ வேட்பாளராக அறிவிக்கப்பட்ட நிலையில் கமலா ஹாரிஸூடன் செப்டம்பர் 4-ல் டி.வி. சேனலின் நேரடி விவாத நிகழ்ச்சியில் பங்கேற்க தயாராக இருப்பதாக டிரம்ப் அறிவித்துள்ளார்.
அமெரிக்க அதிபர் தேர்தல் வரும் நவம்பர் 5-ம் தேதி நடக்க உள்ளது. இதில் ஆளும் ஜனநாயக கட்சி சார்பில் அதிபர் ஜோ பைடன் தேர்தல் களத்திலிருந்து விலகிய நிலையில், துணை அதிபர் கமலா ஹாரிஸ் போட்டியிடுகிறார். குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் களமிறங்கி உள்ளார்.
இதற்கிடையே, ஜனநாயக கட்சி வேட்பாளராக கமலா ஹாரிஸ் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து, கமலா ஹாரிசுடன் நேரடி விவாதம் நடத்த தயார் என டிரம்ப் அறிவித்துள்ளார்.
இது குறித்து அவர் தனது ஊடக பதிவில், வரும் செப்டம்பர் 4-ம் தேதி டி.வி. சேனலின் நேரடி விவாத நிகழ்ச்சியில் கமலா ஹாரிசுடன் பங்கேற்க நான் தயாராக இருக்கிறேன் என கூறி உள்ளார். இதுவரை கமலா ஹாரிஸ் அதிகாரப்பூர்வ வேட்பாளராக அறிவிக்கப்படாமல் இருந்ததால் அவருடனான நேரடி விவாதத்தை டிரம்ப் புறக்கணித்து வந்தார்.
இந்நிலையில், அதிகாரபூர்வ வேட்பாளராக கமலா ஹாரிஸ் அறிவிக்கப்பட்டதும் சவாலை ஏற்றுள்ளார். ஏற்கனவே பிரசாரத்தில் கமலா ஹாரிசுக்கு எதிராக இனவெறி தாக்குதலை டிரம்ப் நடத்தி வரும் நிலையில் அவர்களின் நேரடி விவாத நிகழ்ச்சி பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்3 months 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்3 months 3 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.4 months 2 weeks ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 15-01-2025
15 Jan 2025