எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
திருவனந்தபுரம் : கேரளாவில் நிலச்சரிவால்பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில் அம்மாநில முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு நடிகர்கள் சிரஞ்சீவி, ராம்சரண் ஆகியோர் இணைந்து ரூ. ஒரு கோடி வழங்கியுள்ளனர். நடிகர் அல்லு அர்ஜூன் ரூ. 25 லட்சம் வழங்குவதாக அறிவித்துள்ளார்.
கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்து பெய்த கனமழையால், நிலச்சரிவு ஏற்பட்டது. இதில், வயநாடு மாவட்டத்தில் முண்டகையில் பயங்கர நிலச்சரிவும், காட்டாற்று வெள்ளமும் ஏற்பட்டது.
இதனால், வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி இதுவரை 360-க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். இன்னும் பலர் சிக்கி உள்ளதால் மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த இயற்கை பேரிடர் இந்தியா முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதனிடையே நிலச்சரிவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அனைத்து மக்களும் உதவ வேண்டும் என கேரள மாநில முதல்வர் பினராய் விஜயன் மற்றும் அம்மாநில கவர்னர் ஆரிப் முகமது கான் வேண்டுகோள் விடுத்திருந்தனர்.
இந்த நிலையில் தமிழக அரசு சார்பில் ரூ. 5 கோடி, அ.தி.மு.க. சார்பில் ரூ. ஒரு கோடி, காங்கிரஸ் சார்பில் ரூ. ஒரு கோடி என நிதி உதவி வழங்கப்பட்டுள்ளது.
அதை தொடர்ந்து, நடிகர் மோகன்லால் ரூ. 3 கோடியும், நடிகர்கள் விக்ரம், சூர்யா, கார்த்தி, பகத் பாசில், நடிகர் அல்லு அர்ஜூன், ஜி.வி.பிரகாஷ், நடிகைகள் ஜோதிகா, நஸ்ரியா ஆகியோரும் நிதி உதவி வழங்கி உள்ளனர்.
அந்த வரிசையில், நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில் கேரள முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு நடிகர் சிரஞ்சீவி மற்றும் அவரது மகனும், நடிகருமான ராம்சரண் இணைந்து ஒரு கோடி ரூபாய் நிதி உதவி வழங்கியுள்ளனர். நடிகர் அல்லு அர்ஜுன் கேரள முதல்வரின் பேரிடர் நிவாரண நிதிக்கு ரூ.25 லட்சம் வழங்குவதாக தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்3 months 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்3 months 3 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.4 months 2 weeks ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 15-01-2025
15 Jan 2025