எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சேலம் : தமிழகத்தில் சோதனை அடிப்படையில் இயற்கை எரிவாயு மூலம் 20 அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. டீசல் பயன்பாட்டை விட 2 கிலோ மீட்டர் கூடுதல் மைலேஜ் கிடைப்பதால் போக்குவரத்து கழகத்திற்கு லாபம் கிடைக்கிறது.
காற்றில் கலக்கும் கார்பன் மாசுவை கட்டுப்படுத்த இயற்கை எரிவாயு பயன்பாட்டை அதிகரிக்கும் பணியில் அரசு ஈடுபட்டுள்ளது. இதற்காக முக்கிய நகரங்களில் இயற்கை எரிவாயு பயன்பாட்டை கொண்டு வர நகர இயற்கை எரிவாயு விநியோக திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்துகிறது.
தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம், சேலம், ஈரோடு, கோவை, மதுரை, தூத்துக்குடி உள்ளிட்ட நகரங்களில் இயற்கை எரிவாயு விநியோக திட்டம் செயல்பாட்டில் இருக்கிறது. பெட்ரோல், டீசல், எல்.பி.ஜி. காஸ் சிலிண்டருக்கு மாற்றாக இயற்கை எரிவாயுவை(சி.என்.ஜி.) பயன்படுத்துகின்றனர்.
இதில், வாகன இயக்கத்திற்கும் சி.என்.ஜி. என்னும் இயற்கை எரிவாயுவை பயன்படுத்துகிறார்கள். இதில், தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகமும் சோதனை அடிப்படையில் சி.என்.ஜி. கியாஸ் பஸ்களை இயக்கி பார்த்து வருகிறது.
சென்னை, விழுப்புரம், சேலம், கும்பகோணம், கோவை, மதுரை, திருநெல்வேலி ஆகிய போக்குவரத்து மண்டலங்களில் 2 அல்லது 3 பஸ்களை சி.என்.ஜி. கியாஸ் மூலம் இயக்குகின்றனர். ஒட்டுமொத்தமாக 20 பஸ்கள் இயற்கை எரிவாயுவை கொண்டு இயங்குகிறது.
இந்த பஸ்களின் மைலேஜ், டீசல் மூலம் கிடைப்பதை விட 30 சதவீதம் அதிகம் கிடைக்கிறது. ஒரு லிட்டர் டீசலுக்கு 5 முதல் 6 கிலோ மீட்டருக்கு பஸ் இயக்கப்படுகிறது. அதுவே ஒரு கிலோ சி.என்.ஜி. காஸ் மூலம் 6.5 முதல் 7.5 கிலோ மீட்டருக்கு பஸ் இயங்குகிறது.
சோதனை அடிப்படையில் 20 பஸ்கள் இயக்கப்பட்டு வரும் நிலையில், அதன் எண்ணிக்கையை அதிகரிக்கவும் போக்குவரத்து கழக அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்3 months 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்3 months 3 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.4 months 2 weeks ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 15-01-2025
15 Jan 2025