எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கோவை : புதிய மேயரை தேர்ந்தெடுக்க கோவை மாநகராட்சிக்கு இன்று மறைமுக தேர்தல் நடக்கிறது. தி.மு.க. வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள ரங்கநாயகி போட்டியின்றி தேர்வாக வாய்ப்புள்ளதாக தெரிகிறது.
கோவை மாநகராட்சி மேயராக பதவி வகித்து வந்த 19-வது வார்டு கவுன்சிலர் கல்பனா ஆனந்தகுமார் கடந்த மாதம் தனது மேயர் பதவியை ராஜினாமா செய்தார். இதைத் தொடர்ந்து புதிய மேயரை தேர்வு செய்ய மறைமுக தேர்தல் இன்று (ஆக. 6) நடத்தப்படும் என தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் அறிவித்தது. மாநகராட்சி ஆணையர் மா.சிவகுரு பிரபாகரன் தேர்தல் நடத்தும் அலுவலராக நியமிக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து புதிய மேயர் யார் என கவுன்சிலர்களிடம் கேள்வி எழுந்தது. மண்டல தலைவர்கள், நிலைக்குழு தலைவர்கள் என பலரது பெயர் கூறப்பட்டன. 100 வார்டுகள் கொண்ட கோவை மாநகராட்சியில் 96 இடங்களை திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சியினர் வென்றுள்ளனர்.
எனவே மேயராக அறிவிக்கப்படுபவர் போட்டியின்றி தேர்வு செய்ய அதிக வாய்ப்புகள் இருந்தன. இதற்கிடையே கவுன்சிலர்களில் இருந்து ஒருவரை புதிய மேயராக தேர்வு செய்ய, திமுக கவுன்சிலர்கள் முக்கிய நிர்வாகிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நேற்று (திங்கள்கிழமை) நடந்தது. நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் நேரு கலந்து கொண்டார். மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.
அதன் இறுதியில் 29-வது வார்டு திமுக கவுன்சிலரான ரங்கநாயகி கோவை மாநகராட்சியின் மேயர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இவர் இன்று தனது வேட்பு மனுவை தாக்கல் செய்ய உள்ளார். வேறு யாரும் மனுதாக்கல் செய்யவில்லை என்றால் இவர் மேயராக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதாக தேர்தல் அலுவலரால் அறிவிக்கப்படுவார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்3 months 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்3 months 3 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.4 months 2 weeks ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 15-01-2025
15 Jan 2025