Idhayam Matrimony

வயநாடு நிலச்சரிவு: ராணுவத்தால் அமைக்கப்பட்ட தற்காலிக பாலம் சேதம்

செவ்வாய்க்கிழமை, 6 ஆகஸ்ட் 2024      இந்தியா
Temporary bridge 2024-08-06

வயநாடு, நிலச்சரிவு பாதித்த வயநாட்டில் மீட்பு பணிக்காக ராணுவம் அமைத்த தற்காலிக பாலம் சேதமடைந்துள்ளது. 

வயநாடு நிலச்சரிவு நாட்டையே உலுக்கிய நிலையில், பலி எண்ணிக்கை 400-ஐ தாண்டியுள்ளது. மீட்பு பணி நேற்று 8-வது நாளாக தொடர்ந்து வருகிறது.  மீட்பு பணியில் ஈடுபட்டுள்ள ராணுவ வீரர்கள் உள்ளிட்ட மீட்பு குழுவினர் மிகவும் அர்ப்பணிப்புடன் பணிபுரிந்து வருகிறார்கள். 

இந்த நிலையில் சூரல்மலை-முண்டகை இடையே போக்குவரத்து துண்டிக்கப்பட்டதால், பொக்லைன் உள்ளிட்ட கனரக வாகனங்கள் ஆற்றை கடந்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டதால் மீட்பு பணியை துரிதப்படுத்தும் வகையில் ஆற்றின் குறுக்கே ராணுவத்தினர் பெய்லி பாலம் அமைத்தனர். 

இதன் மூலம் சூரல்மலை-முண்டகை இடையே மீட்பு பணிக்காக வாகனங்கள் சென்று வந்தன. இந்நிலையில் நிலச்சரிவு பாதித்த வயநாட்டில் மீட்பு பணிக்காக ராணுவம் அமைத்த தற்காலிக பாலம் சேதமடைந்துள்ளது. பாலம் முழுமையாக சேதமானதால் நடந்து செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. வாகனம் செல்வதற்காக அமைக்கப்பட்ட பாலத்தில் சீரமைப்பு பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து