Idhayam Matrimony

வங்கதேச நிலைமை குறித்து அனைத்து கட்சிகளுடன் மத்திய அரசு ஆலோசனை

செவ்வாய்க்கிழமை, 6 ஆகஸ்ட் 2024      இந்தியா
Bangladesh 2024 08 06

புது டெல்லி, வங்கதேச நிலைமை குறித்து விவாதிக்க நேற்று அனைத்து கட்சிகளுடன் மத்திய அரசு ஆலோசனை நடத்தியது. 

வங்காளதேசத்தில் ஏற்பட்ட வன்முறையை தொடர்ந்து பிரதமர் ஷேக் ஹசினா தனது பதவியை ராஜினாமா செய்து விட்டு ராணுவ விமானம் மூலம் இந்தியாவுக்கு வந்துள்ளார். அவரை தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் நேரில் சந்தித்து வங்காளேதச நிலவரம் குறித்து ஆலோசனையில் ஈடுபட்டனர்.

இதனை தொடர்ந்து பிரதமர் மோடி நேற்று முன்தினம் இரவு எல்லையில் பாதுகாப்பை பலப்படுத்துவது உள்ளிட்டவை குறித்து மத்திய அமைச்சர்களுடன் ஆலோசித்தார்.இந்த நிலையில் வங்காளதேசம் நிலைமை குறித்து விவாதிப்பதற்காக மத்திய அரசு நேற்று அனைத்து கட்சி கூட்டத்திற்கு அழைப்பு விடுத்து இருந்தது. 

அதன் படி நேற்று காலை 10 மணிக்கு பாராளுமன்றத்தில் உள்ள அறையில் அனைத்து கட்சி கூட்டம் நடைபெற்றது. மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, ராஜ்நாத்சிங், ஜெய்சங்கர், ஜே.பி.நட்டா, கிரண் ரிஜ்ஜூ, எதிர்கட்சி தலைவர் ராகுல் காந்தி, காங்கிரசின் கே.சி. வேணு கோபால், தி.மு.க. சார்பில் டி.ஆர்.பாலு, தேசியவாத காங்கிரசை சேர்ந்த (சரத்பவார் அணி) சுப்ரியா சுலே உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட தலைவர்கள் பங்கேற்றனர்.

இந்தியா-வங்காள தேச எல்லையில் பாதுகாப்பு ஏற்பாடுகள், வங்காளதேச அரசியல் சூழல், ஷேக் ஹசினா இந்தியாவுக்கு வந்தது உள்ளிட்டவை குறித்து வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் கூட்டத்தில் விரிவான விளக்கத்தை அளித்தார்.

பாதுகாப்பு தொடர்பாக எதிர்க்கட்சியினர் தங்களது கருத்துக்களை தெரிவித்தனர். எதிர்க்கட்சிகளின் ஒருமித்த ஆதரவினையும், புரிதலையும் பாராட்டுவதாக ஜெய்சங்கர் தெரிவித்தார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து