Idhayam Matrimony

கிரிக்கெட் வீரர் வீட்டுக்கு தீ வைப்பு

செவ்வாய்க்கிழமை, 6 ஆகஸ்ட் 2024      விளையாட்டு
Mazrafi-bin-Mortaza 2024 08

Source: provided

வங்கதேச முன்னாள் கிரிக்கெட் வீரரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மஸ்ரஃபி மோர்தாசாவின் வீட்டுக்கு போராட்டக்காரர்கள் தீ வைத்தனர்.முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் கட்சியான வங்கதேச அவாமி லீக் சார்பில் போட்டியிட்டு நாடாளுமன்ற உறுப்பினராக தேர்வான இவர், கட்சியின் கொறடாவாக செயல்பட்டு வந்துள்ளார். வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா ராஜிநாமா செய்து வெளியேறியதைத் தொடர்ந்து ஏற்பட்ட வன்முறையில், வங்கதேசத்தின் முன்னாள் கிரிக்கெட் கேப்டன் மஸ்ரஃபி பின் மோர்தசாவின் வீடு தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளது. மாணவர் போராட்டங்களுக்கு மத்தியில் சேக் ஹசீனா நாட்டை விட்டு வெளியேறிய பின்னர் அமைதியின்மை வெடித்தது. மோர்டாசாவின் வீட்டைக் குறிவைத்து, போராட்டக்காரர்கள் தாக்கியுள்ளனர். அவர் 2018 இல் அவாமி லீக்கில் சேர்ந்து நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றார். தற்போது குல்னா பிரிவில் உள்ள நரைல்-2 தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராக பணியாற்றி வரும் மோர்தசா, ஷேக் ஹசீனா தலைமையிலான அவாமி லீக்கின் வேட்பாளராக இந்த ஆண்டின் தொடக்கத்தில் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார். 

மேலும், இவர் கட்சியின் கொறடாவாகவும் செயல்பட்டு வருகிறார். 36 டெஸ்ட், 220 ஒருநாள், 54 டி20 போட்டிகளில் 390 விக்கெட்டுகளையும், 2955 ரன்களையும் குவித்துள்ள மோர்தசா தனது கிரிக்கெட் வாழ்க்கையில் 117 சர்வதேசப் போட்டிகளில் வங்கதேச அணிக்கு கேப்டனாகவும் இருந்தார். கலவரத்தில் மாவட்ட அவாமி லீக் அலுவலகம் தீ வைத்து எரிக்கப்பட்டதோடு, அவாமி லீக் மாவட்டத் தலைவர் சுபாஷ் சந்திரபோஸின் சொத்துக்களும் சேதப்படுத்தப்பட்டன. நாராயண்கஞ்சில், நாராயண்கஞ்ச்-4 எம்.பி.யான ஷமிம் உஸ்மானின் வீடு தாக்கப்பட்டு சேதப்படுத்தப்பட்டது. கொமிலாவில், கொமிலா-6 (சதர்) தொகுதியின் எம்.பி.யான ஏ.கே.எம்.பஹாவுதீன் பஹாரின் வீட்டை அடித்து நொறுக்கிய கும்பல் தீ வைத்தது. மஸ்ரஃபி மோர்தசாவின் வீடு தீவைத்து எரிக்கப்படங்களை வங்கதேச பயனாளர் ஒருவர் எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார்.

___________________________________________________________________

கோலி, ரோகித் குறித்து ஷர்துல் தாகூர்

இந்திய கிரிக்கெட் அணியின் வெற்றிகரமான கேப்டன்களில் ஒருவராக போற்றப்படுபவர் எம்.எஸ்.தோனி. இவரது தலைமையிலான இந்திய அணி ஐசிசி டி20, 50 ஓவர் மற்றும் சாம்பியன்ஸ் டிராபி ஆகிய 3 உலகக்கோப்பைகளை வென்றுள்ளது. அதனால் 3 விதமான ஐசிசி வெள்ளைப்பந்து உலகக்கோப்பைகளை வென்ற ஒரே கேப்டன் என்ற மகத்தான சாதனை படைத்த தோனி சிறந்த பினிஷராகவும் போற்றப்படுகிறார். மேலும் விராட் கோலி, ரோகித் சர்மா போன்ற தற்போதைய நட்சத்திர வீரர்களுக்கு வாய்ப்பு கொடுத்து வளர்த்த பெருமைக்குரியவர். அந்த வகையில் மகத்தான விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாகவும் கேப்டனாகவும் சாதனை படைத்துள்ள அவர் பலருக்கு ரோல் மாடலாக திகழ்கிறார்.

இந்நிலையில் விராட் கோலி, ரோகித், தாம் போன்ற பல இந்திய வீரர்கள் வளர்வதற்கு தோனி முக்கிய காரணமாக இருந்ததாக ஷர்துல் தாகூர் தெரிவித்துள்ளார். இது குறித்து சமீபத்திய நிகழ்ச்சியில் அவர் பேசியது பின்வருமாறு:- "தோனியுடன் விளையாடுவது எப்போதுமே சிறப்பானது. ஏனெனில் அவர் உங்களை வளர அனுமதிப்பார். அவர் எப்பொழுதும் எங்களை சொந்த திட்டத்துடன் விளையாட அனுமதிப்பார். அவர் எப்போதும் எங்களுக்கு திட்டங்களை வகுத்து கொடுக்க மாட்டார்.

குறிப்பாக 'நாளை நான் விக்கெட் கீப்பராக இருக்க மாட்டேன். அப்போது நீங்கள் என்ன செய்வீர்கள்? எனவே உங்கள் அறைக்கு சென்று உங்களுடைய விளையாட்டை சிந்தித்து திட்டத்துடன் வாருங்கள். அது வேலை செய்யவில்லையென்றால் நான் உதவி செய்கிறேன்' என்று தோனி எங்களிடம் சொல்வார். 3 ஐசிசி கோப்பைகளை வென்ற அவர் பல இளம் வீரர்களை வளர்த்து தனது மரபை விட்டு சென்றுள்ளார். தற்போதைய மகத்தான வீரர்களான விராட், ரோகித் போன்றவர்கள் கூட ஆரம்ப காலத்தில் அணியிலிருந்து நீக்கப்பட்டிருப்பார்கள். ஆனால் மகத்தான எம்.எஸ். தோனி அவர்களை ஆதரித்தார். அந்த ஆதரவுடன் அவர்கள் 2012-க்குப்பின் இப்போது வரை அசத்தி வருகிறார்கள்" என்று கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து