முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தங்கம் விலை தொடர் சரிவு

புதன்கிழமை, 7 ஆகஸ்ட் 2024      வர்த்தகம்
gold 2023 01 26

சென்னை, சென்னையில் நேற்று (புதன்கிழமை) ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு 70 ரூபாய் குறைந்து ஒரு கிராம் ரூ.6330-க்கும், பவுனுக்கு ரூ.560 குறைந்து ஒரு பவுன் ரூ. 50,640-க்கும் விற்பனையான நிலையில், 2 நாட்களில் பவுனுக்கு ரூ.1000-க்கும் மேல் குறைந்துள்ளது.

ஆகஸ்ட் மாத தொடக்கத்தில் இருந்தே தங்கம் விலை ஏற்ற இறக்கத்தை சந்தித்து வருகிறது. அந்த வகையில் ஆகஸ்ட் 6ஆம் தேதி தங்கம் விலை ஒரு கிராம் ரூ.6.400-க்கு விற்கப்பட்ட நிலையில் நேற்று (ஆகஸ்ட் 7) மீண்டும் அதிரடியாக குறைந்துள்ளது. 2 நாட்களில் பவுனுக்கு ரூ.1000-க்கும் மேல் தங்கம் விலை குறைந்துள்ளது.

நேற்று ஆகஸ்ட் 7-ம் தேதி 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு 70 ரூபாய் குறைந்து ஒரு கிராம் ரூ. 6330-க்கும், பவுனுக்கு ரூ.560 குறைந்து ஒரு பவுன் ரூ. 50,640-க்கும் விற்பனையானது. வெள்ளி விலை எந்த மாற்றமும் இன்றி ஒரு கிராம் 87.00 ரூபாய்க்கும், ஒரு கிலோ 87,000 ரூபாய்க்கும் விற்பனையானது.

மத்திய பட்ஜெட்டில் தங்கத்திற்கான இறக்குமதி வரியை நிர்மலா சீதாராமன் குறைத்திருந்தார். அதன் பின்னர் கிட்டத்தட்ட 4 நாட்கள் தங்கம் விலை மிகப்பெரிய அளவில் சரிந்தது. ஆனால் அதன் பின்னர் ஏறுவதும், இறங்குவதுமாக இருந்து வருகிறது. இதனால் தங்கத்தில் முதலீடு செய்தவர்கள் கலக்கம் அடைந்துள்ளனர். தங்கத்தில் புதிய முதலீடு செய்பவர்களும் தயக்கம் காட்டுகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 4 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 4 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 4 months 4 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 4 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 6 months 4 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 6 months 4 weeks ago
View all comments

வாசகர் கருத்து