Idhayam Matrimony

கால்நடை மருத்துவப் படிப்பு தரவரிசை பட்டியல் வெளியீடு : விழுப்புரம் மாணவி ஜி.திவ்யா முதலிடம்

புதன்கிழமை, 7 ஆகஸ்ட் 2024      தமிழகம்
Veterinary 2023 06 11

Source: provided

சென்னை : கால்நடை மருத்துவ படிப்புகளுக்கான தரவரிசை பட்டியல் ஆன்லைனில் நேற்று (ஆக.7) வெளியிடப்பட்டுள்ளது. 15 பேர் கட்-ஆப் மதிப்பெண் 200-க்கு 200 எடுத்து சாதனைப் படைத்துள்ளனர். விழுப்புரம் மாணவி ஜி.திவ்யா முதலிடம் பிடித்துள்ளார்.

தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் கீழ் சென்னை, நாமக்கல், திருநெல்வேலி, ஒரத்தநாடு, சேலம் தலைவாசல், உடுமலைப்பேட்டை, தேனி வீராபாண்டி ஆகிய 7 இடங்களில் கால்நடை மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. இந்த கல்லூரிகளில் ஐந்தரை ஆண்டுகள் கொண்ட கால்நடை மருத்துவம் மற்றும் பராமரிப்பு பட்டப்படிப்பு (பி.வி.எஸ்சி. - ஏ.ஹெச்) உள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் கோடுவேளியில் உள்ள உணவு மற்றும் பால்வளத் தொழில்நுட்பக் கல்லூரிகளில் உணவுத் தொழில்நுட்ப பட்டப்படிப்பு (பி.டெக்), பால்வளத் தொழில்நுட்ப பட்டப்படிப்பு (பி.டெக்) மற்றும் ஓசூர் மத்திகிரியில் உள்ள கோழியின உற்பத்தி மற்றும் மேலாண்மைக் கல்லூரியில் கோழியின தொழில்நுட்ப பட்டப்படிப்பு (பி.டெக்) உள்ளன. இந்த 3 பட்டப்படிப்புகளும் 4 ஆண்டுகள் கொண்டது.

பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறும் பி.வி.எஸ்சி. - ஏ.ஹெச் மற்றும் பி.டெக் படிப்புகளுக்கு 2024 - 25-ம் ஆண்டு கலந்தாய்வுக்கு https://adm.tanuvas.ac.in/ என்ற இணையதளத்தில் விண்ணப்பிப்பது கடந்த ஜூன் 3-ம் தேதி காலை 10 மணிக்கு தொடங்கி 28-ம் தேதி மாலை 5 மணியுடன் நிறைவடைந்தது. பி.வி.எஸ்சி. - ஏ.ஹெச் படிப்புக்கு 14,497 பேரும், பிடெக் படிப்புகளுக்கு 3,000 பேரும் என மொத்தம் 17,497 பேர் விண்ணப்பித்திருந்தனர். விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யும் பணிகள் முடிவடைந்ததைத் தொடர்ந்து, தகுதியான மாணவர்களின் தரவரிசைப் பட்டியல் https://adm.tanuvas.ac.in, https://tanuvas.ac.in என்ற பல்கலைக்கழகத்தின் இணையதளங்களில் நேற்று வெளியிடப்பட்டது.

பி.வி.எஸ்சி. - ஏ.ஹெச் படிப்புக்கான தரவரிசைப் பட்டியலில் 15 மாணவர்கள் 15 பேர் கட்-ஆப் மதிப்பெண் 200-க்கு 200 பெற்றுள்ளனர். அதில், வயது அடிப்படையில் (சீனியருக்கு முன்னுரிமை) முதலிடம், இரண்டாமிடம், மூன்றாமிடம் என வகைப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவி ஜி.திவ்யா, ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த மாணவி வி.அபிஸ்ரீ, விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவர் கே.எம்.சூர்யா, மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த மாணவி கே.அஸ்விதா, அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவி ஆர்.நவினா ஆகிய 5 மாணவ- மாணவியர் முதல் 5 இடங்களை பிடித்துள்ளனர். இதில், ஜி.திவ்யா, கே.அஸ்விதா, ஆர்.நவினா ஆகிய மூவரும் முதல் தலைமுறை பட்டதாரி மாணவியர் என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல், பிடெக் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியலில் கட்-ஆப் மதிப்பெண் 200-க்கு 200 பெற்று விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவி ஜி.திவ்யா முதலிடத்தைப் பிடித்துள்ளார். அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவி பி.துர்காதேவி, அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவி ஆர்.அபிநயா, திருவண்ணாமலை மாவட்டடத்தைச் சேர்ந்த மாணவர் ஆர்.மனோஜ் கார்த்திக், தருமபுரி மாவட்டத்தைச் மாணவி எஸ்.சற்குணபிரியா ஆகியோர் கட்-ஆப் மதிப்பெண் 199.500 பெற்று அடுத்த 4 இடங்களைப் பெற்றுள்ளனர்.அரசுப் பள்ளி மாணவர்களுக்கு பி.வி.எஸ்சி. - ஏ.ஹெச் படிப்புகளில் 7.5 சதவீத உள் இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது.

பி.வி.எஸ்சி. - ஏ.ஹெச் படிப்புக்கான தரவரிசைப் பட்டியலில் கட்-ஆப் மதிப்பெண் 199.500 பெற்று தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த மாணவர் பி.அசோக்பிரியன் முதலிடத்தைப் பிடித்துள்ளார். அதே மாவட்டத்தைச் சேர்ந்த மாணவி ஆர்.ராகவி (மதிப்பெண் 199), ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த மாணவர் எஸ்.உதயகுமார் (மதிப்பெண் 198.500), தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த மாணவர் கே.பாலாஜி (மதிப்பெண் 198.500), ராணிப்பேட்டை மாவட்டத்தைச் சேர்ந்த மாணவர் வி.ஹரிராஜ் (மதிப்பெண் 198) ஆகியோர் அடுத்த 4 இடங்களை பெற்றுள்ளனர்.

அதேபோல், பிடெக் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியலில் கட்-ஆப் மதிப்பெண் 196.500 பெற்று கள்ளகுறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த மாணவி கே.கனிமொழி முதலிடத்தைப் பிடித்துள்ளார். அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவி ஆர்.நந்தா (மதிப்பெண் 193), அதே மாவட்டத்தைச் சேர்ந்த மாணவி ஆர்.ராகவி (மதிப்பெண் 191), சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவி கே.ஜனத்நிஷா (மதிப்பெண் 189.500), நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த ஜே.எஸ்.சந்தியா (மதிப்பெண் 189) ஆகியோர் அடுத்த 4 இடங்களை பெற்றுள்ளனர். பி.வி.எஸ்சி. - ஏ.ஹெச் மற்றும் பி.டெக் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வுக்கான தேதி விரைவில் அறிவிக்கப்படும். மேலும் விவரங்களுக்கு 044-29997348, 29997349 ஆகிய தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ளலாம்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து