Idhayam Matrimony

மே. வங்க முன்னாள் முதல்வர் புத்ததேவ் பட்டாச்சார்யா மறைவு : மம்தா பானர்ஜி இரங்கல்

வியாழக்கிழமை, 8 ஆகஸ்ட் 2024      இந்தியா
Buddhadev-Bhattacharya 2024

Source: provided

கொல்கத்தா : மேற்கு வங்க முன்னாள் முதல்வர் புத்ததேவ் பட்டாச்சார்யா காலமானார். அவரது மறைவுக்கு அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி இரங்கல் தெரிவித்துள்ளார். 

மூத்த இடதுசாரி தலைவரும், மேற்கு வங்காள முன்னாள் முதல்வருமான புத்ததேவ் பட்டாச்சார்யா நேற்று காலை காலமானார். அவருக்கு வயது 80. சிறிது காலமாக உடல்நிலை சரியில்லாமல் இருந்த அவர், சுவாசக் கோளாறு காரணமாக அடிக்கடி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். 

கடந்த ஆண்டு, அவருக்கு நிமோனியா பாதிப்பு ஏற்பட்டதையடுத்து, அவருக்கு உயிர்காக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்நிலையில் நேற்று  காலை 8.20 மணிக்கு கொல்கத்தா அவரது இல்லத்தில் புத்ததேவ் பட்டாச்சார்யாவின் உயிர் பிரிந்தது. அவருக்கு மீரா என்ற மனைவியும், சுசேதன் என்ற மகனும் உள்ளனர். 

 1977-ம் ஆண்டு முதல் 2000-ம் ஆண்டு வரை மேற்கு வங்க முதல்வராக இருந்தவர் ஜோதிபாசு. ஜோதிபாசுவுக்குப் பின்னர் 2001-ம் ஆண்டு முதல் 2011-ம் ஆண்டு வரை 2 முறை முதல்வராக  தொடர்ந்து பதவி வகித்தவர் புத்ததேவ் பட்டாச்சார்யா. 

பின்னர் 2011-ம் ஆண்டு முதல் இடதுசாரிகளை வீழ்த்திய மம்தா பானர்ஜி, திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் ஆட்சியை நிலை நிறுத்தி வைத்துள்ளார். மேற்கு வங்காளத்தில் இடதுசாரி அரசின் - மார்க்சிஸ்ட் கட்சியின் கடைசி முதல்வர் புத்ததேவ் பட்டாச்சார்யா. 

இடதுசாரி அரசியல் ஆளுமையாக திகழ்ந்த புத்ததேவ் பட்டாச்சார்யா மிக சிறந்த கவிஞராக, மொழி பெயர்ப்பாளராக, இலக்கிய ஆளுமையாகவும் இருந்தவர்.  இந்நிலையில் புத்ததேவ் பட்டாச்சார்யாவின் மரணத்திற்கு அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி இரங்கல் தெரிவித்துள்ளார்.  

இது குறித்து அவர் தனது டுவிட்டர் பதிவில், முன்னாள் முதல்வர் புத்ததேவ் பட்டாச்சார்யாவின் திடீர் மறைவு அதிர்ச்சியையும் வருத்தமும் அளிக்கிறது. பல ஆண்டுகளாக எனக்கு அவரை தெரியும். கடந்த சில ஆண்டுகளாக அவர்  உடல்நிலை சரியில்லாமல் வீட்டிலேயே ஓய்வெடுத்தபோது சில முறை அவரைச் சந்தித்தேன். 

இந்த துயரமான நேரத்தில் அவரது மனைவி மற்றும் மகனுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள். சி.பி.ஐ.(எம்) கட்சி உறுப்பினர்களுக்கும், அவரைப் பின்பற்றுபவர்கள் அனைவருக்கும் எனது இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது இறுதிப் பயணம் மற்றும் சடங்குகளின் போது அவருக்கு முழு அரசு மரியாதை செய்யப்படும் என்று தெரிவித்துள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து