எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை : புவி கண்காணிப்பு செயல்பாடுகளுக்காக வடிவமைக்கப்பட்டுள்ள செயற்கைக்கோள் வரும் 15-ம் தேதி சிறியரக எஸ்.எஸ்.எல்.வி. டி-3 ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்படவுள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ , புவி கண்காணிப்பு செயல்பாடுகளுக்காக 175.5 கிலோ எடை கொண்ட அதிநவீன இ.ஒ.எஸ்.-08 எனும் செயற்கைக் கோளை வடிவமைத்துள்ளது.
இந்த செயற்கைக்கோள் சிறியரக எஸ்.எஸ்.எல்.வி. டி-3 ராக்கெட் மூலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள ஏவுதளத்தில் இருந்து சுதந்திர தினமான ஆகஸ்ட் 15-ம் தேதி காலை 9.17 மணிக்கு விண்ணில் ஏவப்பட உள்ளது.
குறைந்த எடை கொண்ட மைக்ரோ வகையை சேர்ந்த இந்த செயற்கைகோள் பூமியில் இருந்து 475 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள குறைந்த புவிவட்ட சுற்றுப்பாதையில் நிலை நிறுத்தப்படுகிறது. இதனுடைய ஆயுட்காலம் ஒரு ஆண்டுகள் ஆகும்.
இந்த செயற்கைகோளில், எலக்ட்ரோ ஆப்டிக்கல் இன்பிராரெட் பேலோடு (இ.ஓ.ஐ.ஆர்.), குளோபல் நேவிகேஷன் சாட்டிலைட் சிஸ்டம்-ரிப்ளக்டோமெட்ரி பேலோட் (ஜி.என்.எஸ்.எஸ்.-ஆர்) மற்றும் எஸ்.ஐ.சி.யுவி டோசிமீட்டர் ஆகிய 3 ஆய்வு கருவிகளம் இதில் இடம் பெற்றுள்ளது.
புதிதாக வடிவமைக்கப்பட்ட எஸ்.எஸ்.எல்.வி. ரக ராக்கெட்டுகளின் திட்டத்தை மேம்படுத்தப்பட்ட இந்த ஏவுதல் மூலம் நிறைவேற்றப்படுகிறது. அத்துடன், இந்திய தொழில்துறை மற்றும் என்.எஸ்.ஐ.எல். நிறுவனத்தின் செயல்பாட்டு பணியையும் இந்த செயற்கைகோள் செயல்படுத்துகிறது.
இந்த ராக்கெட்டுக்கான இறுதிக் கட்டப் பணியான கவுண்டவுன் வருகிற 14-ம் தேதி தொடங்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இது மனிதர்களை விண்ணுக்கும் அனுப்பும் ககன்யான் திட்ட விண்கலத்திலும் இடம் பெற உள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்3 months 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்3 months 3 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.4 months 2 weeks ago |