எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை : சென்னையில் இருந்து இங்கிலாந்து செல்லும் பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம் திடீரென ரத்து செய்யப்பட்டதால், அந்த விமானத்தில் பயணிக்கவிருந்த 210 பயணிகள் கடும் அவதியடைந்தனர்.
இங்கிலாந்தில் இருந்து புறப்படும் பிரிட்டிஷ் ஏர்வேஸ் பயணிகள் விமானம் தினமும் அதிகாலை 3.30 மணிக்கு சென்னை விமான நிலையம் வந்து, பின்னர் சென்னையில் இருந்து அதிகாலை 5.35 மணிக்கு இங்கிலாந்து புறப்பட்டுச் செல்லும்.
அந்த வகையில், நேற்று முன்தினம் மாலை சுமார் 240 பயணிகளுடன், இங்கிலாந்தில் இருந்து புறப்பட்டு, சென்னை நோக்கி வந்து கொண்டிருந்த விமானம், திடீரென நடுவானில் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, இங்கிலாந்துக்கு திரும்பிச் சென்று தரை இறங்கி விட்டதாக கூறப்படுகிறது.
இதையடுத்து, ஊழியர்கள் விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர். ஆனாலும், விமானத்தில் ஏற்பட்ட கோளாறு உடனடியாக சரி செய்ய முடியாததால், இங்கிலாந்து - சென்னை பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம் ரத்து செய்யப்பட்டது.
இந்நிலையில், சென்னையில் இருந்து இங்கிலாந்துக்கு பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானத்தில் பயணிப்பதற்காக, சுமார் 210 பயணிகள், சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு, நேற்று அதிகாலை 2.30 மணிக்கு முன்னதாகவே வந்து காத்திருந்தனர்.
ஆனால் தொழில்நுட்ப கோளாறு காரணமாக விமானம் ரத்து செய்யப்பட்டதால், பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம் நேற்று ரத்து என்று அறிவிக்கப்பட்டது. இதையடுத்து பயணிகள் சிலர் துபாய், தோகா, அபுதாபி வழியாக, இங்கிலாந்துக்கு மாற்று விமானங்களில் புறப்பட்டு சென்றனர்.
ஆனால், மற்ற பயணிகள் என்ன செய்வது என்று தெரியாமல் தவித்தனர். பின்னர், அவர்கள் சென்னையில் உள்ள பல்வேறு ஓட்டல்களில் தங்க வைக்கப்பட்டனர். இன்று அதிகாலை இந்த விமானம், சென்னையில் இருந்து இங்கிலாந்து புறப்பட்டு செல்லும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பயணிகள் கடும் அவதிக்குள்ளானார்கள்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்3 months 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்3 months 3 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.4 months 2 weeks ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 15-01-2025
15 Jan 2025