எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புதுச்சேரி : பள்ளிகளில் குழந்தைகளிடத்தில் வேறுபாடு பார்க்கக்கூடாது என்று புதுச்சேரி பாஜக, திமுக, சுயேச்சை எம்எல்ஏ-க்கள் வலியுறுத்தியதால் கல்வித்துறை மூலம் சுற்றுலா அழைத்துச் செல்லும்போது அனைத்துக் குழந்தைகளும் அழைத்துச் செல்லப்படுவார்கள் என்று முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.
புதுச்சேரி பட்ஜெட்டில் அரசு பள்ளிகளில் 8 மற்றும் 9-ம் வகுப்புகளி்ல் படிக்கும் பட்டியலின மற்றும் பழங்குடியின மாணவ - மாணவியர் 3 நாட்களுக்கு கல்விச் சுற்றுலாவுக்கு ஆதிதிராவிடர் நலத்துறை மூலம் அழைத்து செல்லப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் இது தொடர்பாக பட்ஜெட் மீதான பொதுவிவாதத்தில் பேசிய சுயேச்சை எம்எல்ஏ-வான பிரகாஷ்குமார், “புதுச்சேரியில் அரசுப் பள்ளியில் பயிலும் பட்டியலின மாணவர்கள் சுற்றுலா செலவை அரசு ஏற்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை அனைத்து மாணவர்களுக்கும் தர வேண்டும்” என்றார்.
இதனைத்தொடர்ந்து நடந்த விவாதம் வருமாறு; கல்யாணசுந்தரம் (பாஜக): பள்ளி மாணவர்கள் மத்தியில் வேறுபாடு பார்க்கக்கூடாது. பாகுபாடுகள் தெரியக்கூடாது என்பதற்காகத்தான் சீருடை தந்துள்ளோம். மாணவர்களை பிரித்துப்பார்க்கக் கூடாது. அனைவரையும் சுற்றுலா அழைத்துச் செல்லலாம்” என்றார். (சுயேச்சை எம்எல்ஏ-வான நேரு, என்ஆர்.காங்கிரஸ் எம்எல்ஏ-வான கேஎஸ்பி.ரமேஷ், காங்கிரஸ் எம்எல்ஏ-வான வைத்தியநாதன் உள்ளிட்டோரும் இதை வலியுறுத்தினர்). பேரவைத்தலைவர் செல்வம்: “முதல்வர் இதுகுறித்து கவனத்தில் எடுத்து கொள்வார் என்றார்.
இதையடுத்து பட்ஜெட் உரை மீதான விவாதத்தில் முதல்வர் ரங்கசாமி பேசும்போதும் பாஜக எம்எல்ஏ-வான கல்யாணசுந்தரமும் சுற்றுலா விஷயத்தை கோரிக்கையாக எழுப்பினார். அதற்கு முதல்வர் ரங்கசாமி, “ஆதிதிராவிடர் நலத்துறைக்கு உரிய நிதியை பயன்படுத்தி அழைத்து செல்லச் சொல்கிறோம்” என்றார். இதற்கு பாஜக ஆதரவு சுயேச்சை எம்எல்ஏ-வான அங்காளன், "இவ்விஷயத்தில் ஏன் பிரித்து அறிவிக்கிறீர்கள். தனியாக ஏன் அறிவிக்கிறீர்கள்?” எனக் கேள்வி எழுப்பினார். அவரைத் தொடர்ந்து எம்எல்ஏ-க்கள் பலரும் எழுந்து இதுதொடர்பாக கேள்வி எழுப்பினர். இறுதியாக பதிலளித்த முதல்வர் ரங்கசாமி, "கல்வித்துறை மூலம் சுற்றுலா அழைத்துச் செல்லும்போது அனைத்துக் குழந்தைகளும் அழைத்துச் செல்லப்படுவார்கள்" என்று குறிப்பிட்டார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்3 months 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்3 months 3 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.4 months 2 weeks ago |