எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
டாக்கா : வங்கதேசத்தில் ஏற்பட்டுள்ள அமைதியின்மைக்கு மத்தியில் வங்கதேச நடிகர் ஷண்டோ கானும், அவரது தந்தையும் தயாரிப்பாளருமான செலிம் கான் ஆகிய இருவரும் அடையாளம் தெரியாத ஒரு கும்பலால் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
தந்தை மற்றும் மகன் இருவரும் கொடூரமாக கொல்லப்பட்டதற்கான காரணம் எதுவும் இதுவரை வெளியாகவில்லை. நடிகர் ஷண்டோ கானின் தந்தை செலிம் கான் வங்கதேச அவாமி லீக் கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்ட தலைவர் என்று தகவல் தெரிவிக்கின்றன. அடித்துக்கொல்லப்பட்ட வங்கதேச நடிகர் ஷண்டோ கான் 2019 ஆம் ஆண்டில், உத்தம் ஆகாஷ் இயக்கிய 'பிரேம் சோர்' திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். புபுஜான், பிக்கோவ், துங்கியாபரார் மியா பாய் ஆகிய படங்களில் நடித்துள்ளார். கௌஷானி முகோபாத்யாய்க்கு ஜோடியாக பிரியா ரே படத்தில் நடித்தார் ஷாண்டோ கான்.
செலிம் தயாரித்த வங்தேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் தந்தையின் பங்கபந்து ஷேக் முஜிபுர் ரஹ்மானின் வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படமான துங்கிபாராவின் மியா பாயில் அவரது மகன் ஷாண்டோ கான் நடித்தார். சந்த்பூர் சதர் உபாசிலாவைச் சேர்ந்த லக்ஷ்மிபூர் மாடல் யூனியன் பரிஷத் தலைவராகவும் பாலுகேகோ செலீம் கான் இருந்துள்ளார்.
செலீமும் அவரது மகன் சாந்தோவும் திங்கள்கிழமை சந்த்பூரிலிருந்து தப்பிச் செல்லும் போது பலியா யூனியனில் உள்ள ஃபரக்காபாத் பஜாரில் ஒரு கும்பல் மோசமாக தாக்கத் தொடங்கியது. ஆனால், அவர்கள் துப்பாக்கியால் சுட்டு, அங்கிருந்து தப்பினர். சிறிது தூரம் சென்ற பிறகு, மீண்டும் ஒரு கும்பல் தாக்கியதில் சந்த்பூரின் பகாரா பஜாரில் சலீம் கான் மற்றும் அவரது மகன் சாந்தோ கான் இருவரும் கொல்லப்பட்டனர். சாந்தா கானின் மரணத்தை அவரது மாமனார் எம்ஐ மோமின் கான் உறுதிப்படுத்தி உள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்3 months 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்3 months 3 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.4 months 2 weeks ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 15-01-2025
15 Jan 2025