எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
திருச்சி : நடிகர் விஜய்யின் கட்சியான தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டை திருச்சி பொன்மலையில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. திருச்சி பொன்மலை ஜி கார்னர் ரயில்வே திடலில் முதல் மாநாட்டை நடத்துவதற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.
தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாடு நடத்துவதற்காக ரயில்வே கோட்ட மேலாளரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், அக்கடிதத்தில் தேதி ஏதும் குறிப்பிடப்படாததால், தேதி குறிப்பிட்டு மீண்டும் கடிதம் வழங்குமாறு ரயில்வே நிர்வாகம் அறிவுறுத்தியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், அந்த திடல் 8 ஏக்கர் பரப்பளவு மட்டுமே இருப்பதால் கூட்டத்தை கட்டுப்படுத்துவது சிரமம் என்பதால் மாநாடு நடத்த வாய்ப்புகள் குறைவு என்றும் கூறப்படுகிறது.
இந்த முதல் மாநில மாநாட்டில் 10 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்கும் வகையில் பிரம்மாண்டமாக நடத்த திட்டமிட்டு உள்ளதாகவும், செப்டம்பர் மாத இறுதியில் நடத்த மாநாட்டை திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. அதேபோன்று, பல்வேறு மாவட்டங்களில் மாநாடு நடத்த கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் இடம் பார்வையிட்டு வருவதால், அதிகாரப்பூர்வ தகவல் கட்சி தலைமையில் இருந்து வெளியிடப்படும் என திருச்சி மாவட்ட நிர்வாகிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்3 months 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்3 months 3 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.4 months 2 weeks ago |