எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
நியூயார்க், முன்னாள் அமெரிக்க அதிபர் மற்றும் குடியரசு கட்சியின் அதிபர் வேட்பாளருமான டொனால்ட் ட்ரம்ப்பை நேர்காணல் செய்கிறார் எக்ஸ் தள உரிமையாளர் எலான் மஸ்க். இது குறித்து தொடர்ச்சியாக பல்வேறு ட்வீட்களை மஸ்க் பகிர்ந்துள்ளார்.
அவர் இதுகுறித்து கூறியுள்ளதாவது., “முழுவதும் இது ஸ்கிரிப்ட் செய்யப்படாத உரையாடலாக இருக்கும். இதில் எந்த கட்டுப்பாடுகளும் இருக்காது. அதனால் நிச்சயம் இதில் பொழுதுபோக்கு அம்சத்துக்கு உத்தரவாதம் தர முடியும். பயனர்கள் தங்களிடம் இருக்கும் கேள்விகளை போஸ்ட் செய்யலாம்.
எக்ஸின் ஸ்பேசஸில் நேரலையில் இந்த உரையாடல் ஒலிபரப்பாகும். இதற்கு முன்பாக நான் சில சோதனைகளை மேற்கொள்ள வேண்டி உள்ளது” என அந்த ட்வீட்களில் மஸ்க் தெரிவித்துள்ளார். இந்திய நேரப்படி இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 5.30 மணி அளவில் இந்த உரையாடல் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்ட் ட்ரம்புக்கு தனது ஆதரவை மஸ்க் வழங்கியுள்ளார். அதேநேரத்தில் ஜனநாயக கட்சியின் கமலா ஹாரிஸுக்கு பென்சில்வேனியா, மிச்சிகன் மற்றும் விஸ்கான்சின் போன்ற பகுதிகளில் ஆதரவு அதிகரித்துள்ளது. தற்போதையை நிலவரப்படி அதிபர் தேர்தல் ரேஸில் ட்ரம்ப்பை கமலா ஹாரிஸ் முந்தியுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்3 months 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்3 months 3 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.4 months 2 weeks ago |