Idhayam Matrimony

நடிகர் சங்க பொதுக்குழு செப். 8-ம் தேதி கூடுகிறது

புதன்கிழமை, 14 ஆகஸ்ட் 2024      சினிமா
Actor-Sangham 2024 08 14

சென்னை, தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 68-வது பொதுக்குழு கூட்டம் செப்டம்பர் 8-ம் தேதி சென்னையில் நடைபெறுகிறது. 

நடிகர் சங்கத் தலைவர் நாசர் தலைமையில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில் பொதுச்செயலாளர் விஷால், பொருளாளர் கார்த்தி, துணைத்தலைவர்கள் கருணாஸ், பூச்சி முருகன் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். 

 சமீப காலமாக தயாரிப்பாளர் சங்கத்துக்கும், நடிகர் சங்கத்துக்கும் மோதல் போக்கு ஏற்பட்டுள்ளது. நடிகர் விஷால், தனுஷ் உட்பட சில நடிகர்களின் படங்களைத் தயாரிக்கும் தயாரிப்பாளர்கள் தங்களை கலந்தாலோசிக்க வேண்டும் என்று தயாரிப்பாளர் சங்கம் நிறைவேற்றிய தீர்மானத்துக்கு நடிகர் சங்கம் எதிர்ப்பு தெரிவித்தது. 

மேலும் நவம்பர் 1-ம் தேதி முதல், சினிமா தொடர்பான அனைத்துப் பணிகளும் நடைபெறாது என்ற தயாரிப்பாளர் சங்க முடிவுக்கு கண்டனத்தைத் தெரிவித்தது. தொடர்ந்து இரு தினங்களுக்கு முன் நடந்த நடிகர் சங்க செயற் குழுவில், தயாரிப்பாளர் சங்கத்துடன் பிரச்சினைகளைப் பேசி தீர்க்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக அதன் தலைவர் நாசர் தெரிவித்தார்.

இந்நிலையில் நடிகர் சங்கத்தின் 68-வது பொதுக்குழு கூட்டம் செப்டம்பர் 8-ம் தேதி சென்னை காமராஜர் அரங்கில் நடைபெறுகிறது. இதில், சினிமா பணிகளை நிறுத்துவது குறித்த தயாரிப்பாளர் சங்க முடிவு, நடிகர் சங்கக் கட்டிட விவகாரம், நட்சத்திர கலைவிழா நடத்தி நிதிதிரட்டுதல் மற்றும் எதிர்கால திட்டங்கள் குறித்து விவாதித்து முடிவு எடுக்கப்படும் என்று தெரிகிறது.

ஒவ்வொரு பொதுக்குழுவிலும் மூத்த கலைஞர்களை கவுரவிப்பது வழக்கம். அந்த வகையில் தற்போது நடிகர் டெல்லி கணேஷை கவுரவிக்கவிருப்பதாக கூறப்படுகிறது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து