Idhayam Matrimony

தமிழக கவர்னரின் தேநீர் விருந்தில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்கிறார் : அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்

வியாழக்கிழமை, 15 ஆகஸ்ட் 2024      தமிழகம்
Thangam 2023 04 05

சென்னை, தமிழக கவர்னரின் தேநீர் விருந்தில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்கிறார் என்று அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.

சுதந்திர தின உரையில் முதல்வர்  மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிவிப்புகள் குறித்து அமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கம் அளித்துள்ளார். இது தொடர்பாக அவர் பேசியதாவது; முதல்வர்  மு.க.ஸ்டாலின் தனது சுதந்திர தின உரையில் முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். குறிப்பாக 'முதல்வர் மருந்தகம்' திட்டம் தொடங்கப்படும் என முதல்வர்  அறிவித்துள்ளார். இந்த திட்டம் வரும் பொங்கல் திருநாள் அன்று அமலுக்கு வரும். இந்த திட்டத்தின் கீழ் முதற்கட்டமாக 1,000 மருந்தகங்கள் திறக்கப்படும்.

ஓய்வுபெற்ற படை வீரர்களுக்காக முதல்வரின் காக்கும் கரங்கள் திட்டம் அறிமுகப்படுத்தப்படும். இதன் மூலம் முன்னாள் படை வீரர்கள் தொழில் தொடங்க ஒரு கோடி ரூபாய் வரை கடன் வழங்க வழிவகை செய்யப்படும். கடன் தொகையில் 30 சதவீதம் மூலதன மானியம், 3 சதவீதம் வட்டி மானியம் வழங்கப்படும்.

விடுதலை போராட்ட வீரர்களுக்கான மாதாந்திர ஓய்வூதியம் 20,000-ல் இருந்து 21,000 ஆக உயர்த்தி வழங்கப்படும். தியாகிகளின் குடும்ப ஓய்வூதியம் 11,000-ல் இருந்து 11,500 ஆக உயர்த்தி வழங்கப்படும். கட்டபொம்மன்,வ.உ.சி, மருது சகோதரர்களின்  வழித்தோன்றல்களுக்கான ஓய்வூதியம் ரூ,10,500 ஆக உயர்த்தி வழங்கப்படும்.

கவர்னர் அளிக்கும் தேநீர் விருந்தில் அரசின் சார்பில் பங்கேற்க முடிவு செய்யப்பட்டுள்ளது. கவர்னர் அழைத்துள்ள விருந்தில் அமைச்சர்கள், முதல்வர்  மு.க.ஸ்டாலின் பங்கேற்பார்கள். கவர்னரின் கருத்தியல் சார்ந்த விஷயங்களில் திமுகவுக்கு மாறுபட்ட கருத்துக்கள் உள்ளது. ஆனால் கவர்னர் என்ற பதவிக்கு முதல்வர்  மதிப்பு வைத்துள்ளார். எனவே கவர்னரின் பதவிக்கு மதிப்பளிக்கும் வகையில் கவர்னரின் தேநீர் விருந்தில் அமைச்சர்கள் பங்கேற்பார்கள்." இவ்வாறு அவர் பேசினார்.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து