எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, அரசுப்போக்குவரத்துக் கழகங்களுக்கான பொதுவான நிலையாணை அமல்படுத்தப்பட்டதாக நிர்வாகங்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தின் 8 அரசு போக்குவரத்துக் கழகங்களின் கீழ் 1.11 லட்சம் பணியாளர்கள் பணியாற்றுகின்றனர். இவர்களுக்கு நிலையாணை அடிப்படையில் ஊதிய பிடித்தம், தண்டனை போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இது கோட்டங்களுக்கு ஏற்ப வேறுபடுகிறது. எனவே, பொதுவான நிலையாணையை உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்ததன் தொடர்ச்சியாக 1995-ம் ஆண்டு பொதுவான நிலையாணை உருவாக்கப்பட்டது.
இதில் சில சரத்துகள் முரணாக இருந்ததால், அவற்றை திருத்தம் செய்யக் கோரி சிஐடியு சங்கம் சார்பில் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கில் கடந்த 2022-ம் ஆண்டு நீதிமன்றம் பிறப்பித்த தீர்ப்பில், இறுதி செய்யப்பட்ட நிலையாணையை செயல்படுத்த உத்தரவிடப்பட்டது. ஆனாலும், 2 ஆண்டுகளாக நிலையாணை அமலுக்கு வரவில்லை.
இந்நிலையில், பொதுவான நிலையாணை இம்மாதம் முதல் அமலுக்கு வருவதாக போக்குவரத்துக் கழக நிர்வாகங்கள் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மாநகர போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் ஆல்பி ஜான் வர்கீஸ் அனுப்பிய சுற்றறிக்கையில், “அனைத்து போக்குவரத்துக் கழகங்களுக்கான பொதுவான சான்றிடப்பட்ட நிலையாணை ஆக.1-ம் தேதி முதல் அமல்படுத்தப்படுகிறது,” என தெரிவித்துள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்3 months 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்3 months 3 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.4 months 2 weeks ago |