எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, யூடியூப் சேனல்களில் தனக்கு எதிராக அவதூறு கருத்துகளைக் கூறிய நடிகர் சிங்கமுத்து ரூ. 5 கோடி மான நஷ்டஈடு தரக் கோரி நடிகர் வடிவேலு தொடர்ந்த அவதூறு வழக்கில், சிங்கமுத்து பதில் மனு தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நகைச்சுவை நடிகரான சிங்கமுத்துவும், வடிவேலுவும் கடந்த 2000-ஆம் ஆண்டு முதல் ஒன்றாக நடித்து வந்தனர். வடிவேலு குறித்து சிங்கமுத்து தொடந்து விமர்சித்து வந்ததால் 2015-க்கு பிறகு அவர்கள் இருவரும் ஒன்றாக சேர்ந்து நடிக்கவில்லை. இந்த நிலையில், கடந்த பிப்ரவரி, மார்ச் மாதங்களில் பல்வேறு யூடியூப் சேனல்களில் சிங்கமுத்து அளித்த பேட்டியில், வடிவேலு குறித்து மிகவும் தரக்குறைவாகப் பேசியதாக நடிகர் வடிவேலு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தார்.
மேலும், ரூ. 5 கோடி மான நஷ்ட ஈடாக வழங்க சிங்கமுத்துவுக்கு உத்தரவிட வேண்டும் என்றும். வடிவேலு குறித்து அவதூறாகப் பேச சிங்கமுத்துவுக்கு தடை விதிக்க வேண்டும் எனவும் அந்த மனுவில் கோரியிருந்தார். இந்த வழக்கு நேற்று சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த நிலையில், சிங்கமுத்து 2 வாரத்துக்குள் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று தெரிவித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கால அவகாசம் கேட்டு சிங்கமுத்து தரப்பு வழக்குரைஞர் கோரிக்கையை ஏற்று 2 வாரம் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்3 months 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்3 months 3 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.4 months 2 weeks ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 15-01-2025
15 Jan 2025