Idhayam Matrimony

காவிரி டெல்டா பாசனத்துக்கு மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

புதன்கிழமை, 4 செப்டம்பர் 2024      தமிழகம்
Mettur-Dam 2024-09-04

Source: provided

சேலம் : மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையின் காரணமாக நீர்வரத்து அதிகரித்து மேட்டூர் அணை கடந்த மாதம் 2 முறை நிரம்பியது. இதையடுத்து நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை நின்றதால் அணைக்கு நீர்வரத்தும் குறைந்தது. அணைக்கு வரும் நீர்வரத்தை விட அதிகளவில் காவிரி டெல்டா பாசனம் மற்றும் கால்வாய் பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டு வந்ததால் அணையின் நீர்மட்டம் வேகமாக குறைந்தது. இந்த நிலையில் கடந்த வாரம் மீண்டும் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்ததால் அணைக்கு தொடர்ந்து தண்ணீர் வரத்து அதிகரித்து காணப்பட்டது.

இதன் காரணமாக மேட்டூர் அணையின் நீர்மட்டம் மெதுவாக உயர்ந்து வந்தது. இந்த நிலையில் காவிரி டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் தேவை அதிகரித்து உள்ளதால் நேற்று காலை முதல் தண்ணீர் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. நேற்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 116.39 அடியாக இருந்தது. அணைக்கு நீர்வரத்து 15 ஆயிரத்து 888 கனஅடியாக இருந்தது.

அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு இதுவரை 13 ஆயிரத்து 500 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வந்த நிலையில் நேற்று காலை 8 மணி முதல் தண்ணீர் திறப்பு வினாடிக்கு 19 ஆயிரம் கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும் கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்துக்கு 700 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையில் தற்போது 87.82 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது. நீர்வரத்தை விட அதிகளவில் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருவதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் மீண்டும் குறைய தொடங்கியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து