எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, கிருஷ்ணகிரி பாலியல் வழக்கில் மாணவர்களிடம் மன அழுத்தத்தை குறைக்க பிரத்யேக உளவியல் ஆலோசனை மையங்கள் அமைக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசின் பன்னோக்கு சிறப்புக்குழு அறிக்கை வெளியிட்டுள்ளதை தொடர்ந்து வழக்கை வரும் 12-ம் தேதிக்கு தள்ளிவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
போலி என்.சி.சி. முகாம் நடத்தி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்றக்கோரி வழக்கறிஞர் சூரிய பிரகாசம் தொடர்ந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு சார்பில் அமைக்கப்பட்ட பன்னோக்கு சிறப்புக்குழுவின் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
அந்த அறிக்கையில் சிறப்பு குழுவானது சம்மந்தப்பட்ட பள்ளிகளுக்கு சென்று பாதிக்கப்பட்ட மாணவிகள், அவர்களுடைய பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு உளவியல் ஆலோசனை வழங்கியதாகவும். பாதிப்பிலிருந்து விரைந்து மீட்டுவர அனைத்து நடவடிக்கையும் எடுத்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
போலி என்.சி.சி. முகாம் நடத்தப்பட்டதாக கூறப்படும் மற்ற பள்ளிகளுக்கும் சென்று அங்கும் பல்வேறு உளவியல் ஆலோசனை வழங்கியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக போக்சோ புகார்களை எப்படி வழங்குவது ஆசிரியர்கள் அதை எப்படி கையாள்வது உள்ளிட்ட ஆலோசனையும் வழங்கியுள்ளதாகவும். பல்வேறு விழிப்புணர்வுகளை ஏற்படுத்தியதும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் சம்மந்தப்பட்ட மாணவிகளுக்கு மன அழுத்தம் உள்ளதா என கண்டறியப்பட்டுள்ளதாகவும். மனதளவில் பாதிக்கப்பட்ட மாணவிகளின் எதிர்கால பாதுகாப்பு குறித்தும் தற்போது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பெற்றோர்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் இத்தகைய சம்பவங்களை தடுக்கும் வகையில் நடைமுறையில் உருவாக்க சிறப்பு குழு அரசுக்கு பல்வேறு பரிந்துரைகளை வழங்கியுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் சட்டத்திற்கு புறம்பாக செயல்பட்ட பள்ளியை நிர்வகிக்க சிறப்பு அதிகாரியை நிர்வகிக்க தனியார் பள்ளி கல்வி இயக்குனருக்கு தற்போது பரிந்துரை அளிக்கப்பட்டுள்ளதாகவும். அந்த பரிந்துரை தீவிர பரிசீலனையில் இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது. அதை தொடர்ந்து இந்த வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்றக் கோரிய மனு வரும் 12-ம் தேதிக்கு தள்ளிவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்3 months 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்3 months 3 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.4 months 2 weeks ago |