எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கொல்கத்தா, கொல்கத்தா மருத்துவமனையில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட பெண் டாக்டரின் குடும்பத்தினர், 'லஞ்சம் கொடுத்து வழக்கை மூடி மறைக்க முயற்சி செய்தனர்' என போலீசார் மீது குற்றம் சாட்டியுள்ளனர்.
மேற்கு வங்கத்தின் கொல்கத்தாவில், ஆர்.ஜி.கார் அரசு மருத்துவக் கல்லுாரி மற்றும் மருத்துவமனை செயல்படுகிறது. இங்கு முதுநிலை இரண்டாம் ஆண்டு படித்த, 31 வயது பயிற்சி பெண் டாக்டர், பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டார். பெண் டாக்டர் மரணத்துக்கு நீதி கேட்டு, நாடு முழுவதும் மருத்துவர்கள் போராட்டம் நடத்தினர். இன்று வரை மேற்கு வங்கத்தில் இது தொடர்பான கொந்தளிப்பு அடங்கவில்லை.
இந்நிலையில்,லஞ்சம் கொடுத்து வழக்கை போலீசார் மூடி மறைக்க முயற்சி செய்தனர் என பெண் டாக்டர் குடும்பத்தினர் குற்றம் சாட்டினர். அவர்கள் கூறியதாவது: உடலை அவசரமாக தகனம் செய்ய வலியுறுத்தினர். லஞ்சம் கொடுத்து வழக்கை போலீசார் மூடி மறைக்க முயற்சி செய்தனர். போலீஸ் அதிகாரியிடம் இருந்து லஞ்சம் வாங்க மறுத்துவிட்டோம். வழக்குப்பதிவு செய்யாமல் போலீசார் ஆரம்பத்திலிருந்தே விசாரிக்க மறுப்பு தெரிவித்தனர். உடலை பார்க்கவும் அனுமதிக்கவில்லை. உடலை பிரேத பரிசோதனை செய்ய எடுத்து செல்லப்பட்டபோது போலீஸ் ஸ்டேஷனில் காத்திருக்க வைத்துவிட்டனர். இவ்வாறு அவர்கள் கூறினர்.
இந்த சம்பவத்துக்கு பிறகு, மருத்துவமனையில் போலீசார் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பை அதிகரிக்க நடவடிக்கை எடுக்குமாறு பலமுறை கோரிக்கை விடுத்தும், செவிசாய்க்கவில்லை என மருத்துவ மாணவர்கள் நிர்வாகம் மீது குற்றம் சாட்டி வந்தது குறிப்பிடத்தக்கது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்3 months 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்3 months 3 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.4 months 2 weeks ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 15-01-2025
15 Jan 2025